Doctor Vikatan: 50 வயதில் மலச்சிக்கல்… மருந்து எடுத்தால் மட்டுமே தீர்வு; நிரந்தரமாகிவிடுமோ? | Constipation After 50… Relying Only on Medication for Relief: Could It Be Permanent?

Spread the love

மலமிளக்கி மருந்துகளை (Laxatives) தொடர்ந்து பயன்படுத்தினால் அது பழக்கமாகிவிடுமா… எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

எல்லா மலமிளக்கி மருந்துகளும் உடலுக்குப் பழக்கமாகிவிடுவதில்லை (Dependency). ஆனால், குடலைத் தூண்டி மலம் கழிக்க வைக்கும் சில வகை மருந்துகளை (Stimulant laxatives) மருத்துவர் ஆலோசனையின்றி நீண்ட காலத்திற்குப் பயன்படுத்தினால், குடல் தொடர்பான வேறு சிக்கல்கள் ஏற்படலாம். அடிக்கடி மலச்சிக்கல் ஏற்பட்டால், மருத்துவரின் ஆலோசனைப்படியே மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

நீடித்த மலச்சிக்கல், மலத்தில் ரத்தம், காரணமின்றி எடை குறைதல், ரத்தச்சோகை அல்லது மலம் கழிக்கும் பழக்கத்தில் திடீர் மாற்றம் ஆகியவை இருந்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகி அதற்கான சரியான காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை பெற வேண்டும்.

நீடித்த மலச்சிக்கல், மலத்தில் ரத்தம், காரணமின்றி எடை குறைதல், ரத்தச்சோகை அல்லது மலம் கழிக்கும் பழக்கத்தில் திடீர் மாற்றம் ஆகியவை இருந்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகி அதற்கான சரியான காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை பெற வேண்டும்.

நீடித்த மலச்சிக்கல், மலத்தில் ரத்தம், காரணமின்றி எடை குறைதல், ரத்தச்சோகை அல்லது மலம் கழிக்கும் பழக்கத்தில் திடீர் மாற்றம் ஆகியவை இருந்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகி அதற்கான சரியான காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை பெற வேண்டும்.

மலச்சிக்கலைத் தவிர்க்க ஒரு நாள் மாதிரி உணவுத் திட்டம்

நமது அன்றாட தென்னிந்திய உணவுப் பழக்கத்திற்கு ஏற்ற, எளிமையான மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுத் திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

காலையில் தூங்கி எழுந்தவுடன் 1 முதல் 2 டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீர் குடிக்கவும் (விருப்பப்பட்டால் சிறிது எலுமிச்சைப்பழச் சாறு சேர்த்துக்கொள்ளலாம்). இதனுடன் இரவே ஊறவைத்த 4 முதல் 5 பாதாம் அல்லது உலர் திராட்சையைச் சாப்பிடலாம். காலை உணவாக (8:00 – 9:00 மணிக்குள்) 2 முதல் 3 ராகி அல்லது கம்பு தோசை, இட்லி அல்லது ஓட்ஸ் கஞ்சியுடன் நிறைய காய்கறிகள் போட்ட சாம்பார் அல்லது சட்னி சேர்த்துக்கொள்ளுங்கள்.

காலை 11:00 மணியளவில் சிற்றுண்டியாக ஒரு கிண்ணம் நறுக்கிய பப்பாளி, தோலுடன் கூடிய ஒரு கொய்யாப்பழம் அல்லது ஒரு டம்ளர் மோர் அருந்தலாம். மதிய உணவிற்கு (1:00 – 2:00 மணிக்குள்) 1 கப் கைக்குத்தல் அரிசி சாதம் அல்லது 2 சப்பாத்தியுடன், 1 கப் கீரை கூட்டு அல்லது பொரியல், பருப்பு, காய்கறிகள் நிறைந்த கூட்டு மற்றும் சிறிது தயிர் எடுத்துக்கொள்ளுங்கள்.

மாலை 4:30 முதல் 5:30 மணிக்குள் ஒரு கப் வேகவைத்த சுண்டல் (கொண்டைக்கடலை அல்லது பாசிப்பயறு) மற்றும் பால் குறைவான டீ அல்லது கிரீன் டீ குடிக்கலாம். இரவு உணவை (7:30 – 8:30 மணிக்குள்) 2 முழு கோதுமை சப்பாத்தி அல்லது தினை/வரகு உப்புமாவுடன் காய்கறி குருமா அல்லது தால், மற்றும் சிறிய கிண்ணம் வெள்ளரிக்காய் அல்லது கேரட் சாலட் சேர்த்து எளிமையாக முடித்துக்கொள்ளுங்கள். இரவு உறங்கச் செல்லும் முன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீர் அல்லது வெதுவெதுப்பான பால் குடிப்பது நல்லது.

இத்துடன் நாள் முழுவதும் குறைந்தது 2.5 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வது குடல் இயக்கத்தைச் சீராக்கப் பெரிதும் உதவும்.

டாக்டர்  எம். பரத்குமார்:

அப்போலோ மருத்துவமனையில் , குடல், இரைப்பை சிகிச்சை மருத்துவர்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *