Donald Trump நடாலி ஹார்ப்பை முத்தமிட்டாரா? – வைரலான புகைப்படத்தின் உண்மை பின்னணி! | Donald Trump Kissing Natalie Harp? Truth Behind Photo

Spread the love

“ட்ரம்ப், நடாலி ஹார்ப்பை முத்தமிடுகிறார்…” – இந்தப் புகைப்படம்தான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்க அதிபர் Donald Trump, அவருடைய Executive Assistant நடாலி ஹார்ப்பை கோல்ஃப் மைதானத்தில் முத்தமிடுவதுபோல இந்தப் புகைப்படம் உள்ளது. இதைப் பார்த்த சிலர், இருவருக்கும் இடையே காதல் உறவு இருப்பதாகப் பதிவிட்டு வருகின்றனர்.

ஆனால், இந்தப் புகைப்படம் உண்மையானதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதுவரை கிடைத்த தகவல்படி, இந்தப் புகைப்படம் உண்மையானது என்று உறுதி செய்யும் நம்பகமான ஆதாரம் எதுவும் இல்லை. மேலும், புகைப்படத்தில் இருக்கும் சில விஷயங்கள் இது AI மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன.

குறிப்பாக, தெளிவான புகைப்படப் பதிப்பில் நடாலி ஹார்ப்பின் ஒரு கையில் ஆறு விரல்கள் இருப்பது போலத் தெரிகிறது. இதைப் பார்த்த பலரும், “இது AI படம்” என்று சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதோடு, கோல்ஃப் வண்டியில் இருக்கும் கிளப்கள் வைக்கப்பட்டுள்ள இடமும் இயல்பாக இல்லை என்று சிலர் கூறியுள்ளனர். புகைப்படத்தில் இருக்கும் கொடியிலும் கோல்ஃப் கிளப்பின் அடையாளம் எதுவும் இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆனால், நடாலி ஹார்ப் ட்ரம்ப்புடன் இருப்பது புதிதான விஷயம் இல்லை. அவர் ட்ரம்ப்பின் நெருங்கிய உதவியாளராக இருந்து வருகிறார். பல கோல்ஃப் நிகழ்வுகளிலும் ட்ரம்ப்புடன் அவர் சென்றிருக்கிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில் Virginia-வில் உள்ள Trump National Golf Club-லும் இருவரும் ஒன்றாகப் புகைப்படம் எடுத்துள்ளனர்.

ட்ரம்ப்பும் நடாலி ஹார்ப்பும் ஒன்றாக இருக்கும் உண்மையான புகைப்படங்கள் இருந்தாலும், தற்போது வைரலாகும் இந்த முத்தப் புகைப்படம் உண்மையானது என உறுதி செய்யப்படவில்லை.இது AI மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம் அல்லது கணினி மூலம் மாற்றப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *