“Don’t Misrepresent Comments Made About the Show!” – Vijay TV Clarifies Bigg Boss Controversy |’நிகழ்ச்சி சம்பந்தப்பட்டு பேசியதை தவறாக சித்தரிக்க வேண்டாம்!” – விஜய் சேதுபதி பேச்சு; விஜய் டிவி விளக்கம்!

Spread the love

பிக்பாஸில் கடந்த சனிக்கிழமை வெளியான எபிசோடில், “தலைமைத்துவம் என்றால் என்னவென்றே தெரியாமல் வாய்க்கு வந்த வாக்குறுதிகளை அள்ளிவிட்டு பிரச்னை வரும்போது எதிர்க்கட்சி மீது பழியை போட்டு தெறித்து ஓடுவது தலைமைப் பண்பல்ல!’ என நிகழ்ச்சியில் நடந்த விஷயங்களை மையப்படுத்திப் பேசியிருந்தார். இதை முதல்வர் விஜய்யை நோக்கிய விமர்சனமாக எடுத்துக் கொண்டு தவெகவினர் சமூகவலைதளங்களில் விஜய் சேதுபதியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக விஜய் டிவி அளித்திருக்கும் விளக்கத்தில், ‘Bigg Boss தமிழ் சீசன் 10 ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி மட்டுமே. நிகழ்ச்சியில் இடம்பெறும் உரையாடல்கள், கருத்துகள் அனைத்தும் நிகழ்ச்சியை மையப்படுத்திய சூழலுக்கு உட்பட்டவையே. அவற்றை நிகழ்ச்சிக்கு வெளியே உள்ள எந்தவொரு நபர், அமைப்பு அல்லது கொள்கையுடன் தொடர்புபடுத்திப் பார்க்கக் கூடாது’ என விஜய் டிவி தெரிவித்துள்ளது.

மேலும், நிகழ்ச்சியில் இடம்பெறும் எந்தவொரு கருத்தும் நிகழ்ச்சிக்கு வெளியே உள்ள நபர், அமைப்பு அல்லது சூழ்நிலையை ஆதரிப்பதாகவோ, விமர்சிப்பதாகவோ அல்லது பிரதிபலிப்பதாகவோ கருதக்கூடாது என்றும் விளக்கம் அளித்திருக்கிறது.

விஜய் சேதுபதியின் கருத்துக்கு தவெக தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், விஜய் டிவியின் இந்த விளக்கம் தற்போது கவனம் பெற்றிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *