திரையுலகில் பெரும் வரவேற்பைப் பெற்ற திரிஷ்யம் படத்தின் 4-ம் பாகம் உருவாகவுள்ளது எனத் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் தெரிவித்திருக்கிறார்.
கடந்த மே 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியான “திரிஷ்யம் 3′, வெளியான சில நாட்களிலேயே ரூ.100 கோடி வசூல் சாதனையுடன் பிளாக்பாஸ்டர் வெற்றியைப் பதிவு செய்தது.
ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றபோதிலும், மோகன்லால் ‘ஜார்ஜ்குட்டி’ கதாபாத்திரத்தில் மீண்டும் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தார்.

இதற்கிடையில் ‘தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர்’ இதழுக்கு இயக்குநர் ஜீத்து ஜோசப் பேட்டியளித்திருந்தார். அதில், “ ஒவ்வொரு பாகம் முடியும்போதும், அடுத்த பாகத்திற்கான கதையை யோசிக்குமாறு தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
முதல் பாகத்திற்குப் பிறகு இரண்டாவதையும், இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பின் போது மூன்றாவது பாகத்தையும் யோசிக்கச் சொன்னார்கள்.