E20 பெட்ரோல் பாதுகாப்பானதா? SIAM எச்சரிக்கை முதல் விளக்கம் வரை முழு விவரம்|

Spread the love

“தற்போதுள்ள விதிகளின்படி, எரிபொருள் தரப் பரிசோதனை என்பது 150-க்கும் மேற்பட்ட அளவுகோல்களைக் கொண்டு எண்ணெய் நிறுவனங்களால் (OMCs) மிகவும் துல்லியமாகவும் முழுமையாகவும் நடத்தப்படும் ஒரு செயலமுறையாகும்.

குறிப்பிட்ட அந்தச் செய்தி, வாகனத் துறை, எண்ணெய் நிறுவனங்கள், உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் பரிசோதனை முகமைகள் ஆகியவற்றுக்கு இடையே வழக்கமாக நடைபெறும் தொழில்நுட்ப ஆலோசனைகளின் ஒரு பகுதியாக அனுப்பப்பட்ட கடிதமே ஆகும்.

அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சில புள்ளிவிவரங்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விரிவான தகவல்களைச் சேகரித்து, எங்களது உறுப்பினர் நிறுவனங்களுடன் கலந்தாலோசித்த பிறகே முழுமையாக உறுதி செய்யப்பட வேண்டும்.

SIAM - பதில் கடிதம்

SIAM – பதில் கடிதம்

மேலும், மத்திய பெட்ரோலிய அமைச்சகம் (MoPNG) முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனாலில் குளோரைடு/சல்பர் அளவு 3ppm-க்கு மிகாமல் இருக்க வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் வாகனத் துறையின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்கின்றன.

அதுமட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள 87,000-க்கும் மேற்பட்ட பங்குகளில் நாளொன்றுக்கு 8 முதல் 12 முறையும், மழை பெய்து முடிந்த பிறகும் தண்ணீர் கசிவு உள்ளதா எனப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *