Emmy 2026: கோலாகலமாக நடந்து முடிந்த 78வது எம்மி விருதுகள்; வெற்றியாளர்கள் யார் யார்… முழு பட்டியல்

Spread the love

78-வது எம்மி விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சலஸிலுள்ள பீகாக் தியேட்டரில் (Peacock Theater) நடைபெற்றது. அதில் பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. விருது வென்ற வெற்றியாளர்களின் பட்டியலைப் பின்வருமாறு பார்க்கலாம்.

Emmy Awards
Emmy Awards

சிறந்த நாடகத் தொடர் (Drama Series):

ஆர். ஸ்காட் ஜெம்மில் இயக்கிய ‘தி பிட்’ (The Pitt) சிறந்த நாடகத் தொடருக்கான விருதினை வென்றது. ‘தி பிட்’ தொடர்ச்சியாக 2-வது ஆண்டாகச் சிறந்த நாடகத் தொடருக்கான விருதை வென்றது கூடுதல் சிறப்பாகப் பார்க்கப்பட்டது.

சிறந்த நகைச்சுவைத் தொடர் (Comedy Series):

கேட்டி டிப்போல்ட் இயக்கிய `விடோஸ் பே’ (Widow’s Bay) என்ற தொடருக்குச் சிறந்த நகைச்சுவைத் தொடருக்கான விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

நாடகத் தொடர் – சிறந்த நடிகர்: நாடகத் தொடரில் சிறந்த நடிகருக்கான விருதினை ‘தி பிட்’ தொடரில் நடித்த ‘நோவா வைல்’ (Noah Wyle) வென்றார்.

நாடகத் தொடர் – சிறந்த நடிகை:

நாடகத் தொடரில் சிறந்த நடிகைக்கான விருதினை ‘ப்ளூரிபஸ்’ (Pluribus) தொடரில் நடித்த ‘ரியா சீஹார்ன்’ (Rhea Seehorn) வென்றார்.

நாடகத் தொடர் – சிறந்த துணை நடிகர்:

‘டாஸ்க்’ (Task) நாடகத் தொடரில் நடித்ததற்காகச் சிறந்த துணை நடிகருக்கான விருதினை ‘டாம் பெல்ஃப்ரி’ (Tom Pelphrey) வென்றார்.

நாடகத் தொடர் – சிறந்த துணை நடிகை:

‘தி டிப்ளமேட்’ (The Diplomat) நாடகத் தொடரில் நடித்ததற்காகச் சிறந்த துணை நடிகைக்கான விருதினை அல்லிசன் ஜேனி (Allison Janney) வென்றார்.

Allison Janney - The Diplomat
Allison Janney – The Diplomat

நகைச்சுவைத் தொடர் – சிறந்த நடிகர்:

நகைச்சுவைத் தொடரில் சிறந்த நடிகருக்கான விருதினை மேத்யூ ரைஸ்’ (Matthew Rhys) விடோஸ் பே’ (Widow’s Bay) தொடரில் நடித்ததற்காக வென்றார்.

நகைச்சுவைத் தொடர் – சிறந்த நடிகை:

நகைச்சுவைத் தொடரில் சிறந்த நடிகைக்கான விருதினை ஜீன் ஸ்மார்ட்’ (Jean Smart) ஹேக்ஸ்’ (Hacks) தொடரில் நடித்ததற்காக வென்றார். ஹேக்ஸ் தொடருக்காகத் தொடர்ச்சியாக 5-வது முறையாக நகைச்சுவைத் தொடரில் சிறந்த நடிகைக்கான விருதினை வென்றார்.

நகைச்சுவைத் தொடர் – சிறந்த துணை நடிகர்:

‘ஸ்டீபன் ரூட்’ (Stephen Root) நகைச்சுவைத் தொடரில் சிறந்த துணை நடிகருக்கான விருதினை `விடோஸ் பே’ (Widow’s Bay) தொடரில் நடித்ததற்காக வென்றார்.

நகைச்சுவைத் தொடர் – சிறந்த துணை நடிகை:

‘கேட் ஓ’ஃப்ளின்’ (Kate O’Flynn) நகைச்சுவைத் தொடரில் சிறந்த துணை நடிகைக்கான விருதினை `விடோஸ் பே’ (Widow’s Bay) தொடரில் நடித்ததற்காக வென்றார்.

சிறந்த ஆந்தாலஜி/ லிமிடெட் தொடர்:

`டி.டி.எஃப் செயிண்ட் லூயிஸ்’ (DTF St. Louis) என்ற தொடருக்குச் சிறந்த லிமிடெட் மற்றும் ஆந்தாலஜி தொடர் என்ற பிரிவின் கீழ் விருது வழங்கப்பட்டது.

ஆந்தாலஜி / லிமிடெட் தொடர் – சிறந்த நடிகர்:

`தி பீஸ்ட் இன் மீ’ (The Beast in Me) தொடரில் நடித்ததற்காக மேத்யூ ரைஸுக்கு (Matthew Rhys) லிமிடெட் தொடரில் சிறந்த நடிகர் என்ற பிரிவின் கீழ் விருது வழங்கப்பட்டது.

ஆந்தாலஜி தொடர் – சிறந்த நடிகை:

‘ரிமார்க்கப்ளி பிரைட் க்ரீச்சர்ஸ்’ (Remarkably Bright Creatures) தொடரில் நடித்ததற்காகச் சாலி ஃபீல்ட் (Sally Field) லிமிடெட் தொடரில் சிறந்த நடிகை என்ற பிரிவின் கீழ் விருது வழங்கப்பட்டது.

சிறந்த நாடகத் தொடர் இயக்குநர்:

சிறந்த நாடகத் தொடர் இயக்குநர் என்ற விருதினை ‘சவுல் மெட்ஸ்ஸ்டைன்’ (Saul Metzstein) ‘ஸ்லோ ஹார்ஸஸ்’ (Slow Horses) என்ற தொடரை இயக்கியதற்காக வென்றார்.

Matthew Rhys
Matthew Rhys

சிறந்த நகைச்சுவைத் தொடர் இயக்குநர்:

சிறந்த நகைச்சுவைத் தொடர் இயக்குநர் என்ற விருதினை ‘ஹிரோ முராய்’ (Hiro Murai) ‘விடோஸ் பே’ (Widow’s Bay) என்ற தொடரை இயக்கியதற்காக வென்றார்.

சிறந்த நாடகத் தொடர் எழுத்தாளர்:

சிறந்த நாடகத் தொடர் எழுத்தாளர் என்ற விருதினை ‘வின்ஸ் கில்லிகன்’ (Vince Gilligan) ‘ப்ளூரிபஸ்’ (Pluribus) என்ற தொடரை எழுதியதற்காக வென்றார்.

சிறந்த நகைச்சுவைத் தொடர் எழுத்தாளர்:

சிறந்த நகைச்சுவைத் தொடர் எழுத்தாளர் என்ற விருதினை ‘கேட்டி டிப்போல்ட்’ (Katie Dippold) ‘விடோஸ் பே’ (Widow’s Bay) என்ற தொடரை எழுதியதற்காக வென்றார்.

பாப் ஹோப் மனிதாபிமான விருது:

மைக்கேல் ஜே. ஃபாக்ஸுக்கு (Michael J. Fox) பாப் ஹோப் மனிதாபிமான விருது (Bob Hope Humanitarian Award) வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *