Engineer quits US job to earn ₹30 lakh annually from drumstick farming.அமெரிக்க வேலையை ராஜினாமா செய்துவிட்டு முருங்கை விவசாயத்தில் ரூ.30 லட்சம் சம்பாதிக்கும் எஞ்சினியர்

Spread the love

முருங்கை இலையில் ரூ.12 லட்சம்

அங்கு அவர் முருங்கை சாகுபடி மற்றும் அதன் வணிக திறன்களைப் படித்தார். அதன் பிறகு தனது 5 ஏக்கர் நிலத்தில் முருங்கைக்காய் பயிரிட்டார். இப்போது அந்த 5 ஏக்கரில் அவருக்கு ஆண்டுக்கு 36 லட்சம் வருமானம் கிடைக்கிறது. முருங்கை இலை, முருங்கைக்காய் மற்றும் மருங்கை விதைகள் மூலம் வருவாய் ஈட்டுகிறார். முருங்கை இலைகள் மூலம் மட்டும் தனக்கு ரூ.12 லட்சம் கிடைப்பதாக தெரிவித்துள்ளார். ஒரு ஏக்கரில் முருங்கை இலைகளுக்காக முருங்கை மரங்களை நடவு செய்துள்ளார். இது தவிர முருங்கைக்காய் மூலம் ரூ.17 லட்சம் வருமானம் கிடைக்கிறது. அதோடு முருங்கை விதை மூலம் ரூ.7 லட்சம் கிடைப்பதாக தெரிவித்துள்ளார்.

மொத்தம் ரூ.36 லட்சம் கிடைக்கிறது. இதில் ரூ.6 லட்சம் உரம், ஆட்கள் கூலி போன்ற செலவுகளுக்கு சென்றுவிடுகிறது. ரூ.30 லட்சம் ரூபாய் லாபமாக கிடைப்பதாக சாகர் தெரிவித்துள்ளார். உலர்ந்த முருங்கை இலைகளை பொடியாக்கி பதப்படுத்தி, மொத்த விற்பனையாளர்கள் மற்றும் ஆர்கானிக் கடைகளுக்கு நேரடியாக விற்பனை செய்கிறார். இதன் மூலம் உலர்ந்த இலை பொடிகளை ஒரு கிலோ ரூ.500 முதல் 600 வரை விற்பனை செய்கிறார். இலைகள், முருங்கை காய், விதைகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட முருங்கைப் பொருட்களிலிருந்து வருமானம் கிடைக்கிறது.

இலைகள் மற்றும் முருங்கைகாய் ஆகிய இரண்டும் அதிக சத்துக்கள் கொண்டது என்பதால் அதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் அதிக தேவை இருக்கிறது. விவசாயம் எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்று சாகர் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *