EPFO சந்தாதாரர்களுக்கு குட்நியூஸ்.. மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு! – Kumudam

Spread the love

தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும் தொகை EPFO கணக்கில் சேமிக்கப்படுகிறது. இந்த சேமிப்புக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு வட்டி வழங்கி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டிற்கும் 8.25 சதவீத வட்டி வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளதால், கோடிக்கணக்கான தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, வட்டித் தொகையை விரைவாக அனைத்து கணக்குகளிலும் வரவு வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஜூலை 15 அல்லது 16-ஆம் தேதிக்குள் வட்டிப் பணம் பயனாளர்களின் கணக்கில் செலுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

வட்டித் தொகை சேமிப்பு இருப்பின் அடிப்படையில் கணக்கிடப்படும். உதாரணமாக, EPFO கணக்கில் ரூ.1 லட்சம் இருப்பு வைத்திருப்பவர்களுக்கு ரூ.8,250, ரூ.2 லட்சம் இருப்பு உள்ளவர்களுக்கு ரூ.16,500, ரூ.5 லட்சம் இருப்பு வைத்திருப்பவர்களுக்கு ரூ.41,250 வரை வட்டியாக கிடைக்கும்.

தங்களது EPFO கணக்கில் வட்டிப் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை சந்தாதாரர்கள் ஜூலை 16-ஆம் தேதிக்குப் பிறகு EPFO இணையதளம், உமங் (UMANG) செயலி அல்லது மிஸ்டு கால், எஸ்எம்எஸ் சேவைகள் மூலம் எளிதாக சரிபார்க்கலாம். இந்த அறிவிப்பு, தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு பெரும் நிவாரணமாக பார்க்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *