Nalam AI: தவெக அரசின் நலம் ஏஐ சாட்போட்; பயன்படுத்துவது எப்படி? – முழு விவரம்! | The Minister has explained how to use the Nalam AI app.

Spread the love

முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி பொதுமக்களுக்கு அரசின் மருத்துவ சேவைகள் எளிதில் சென்றடையும் வகையில் வடிவமைக்கப்பட்ட “நலம்AI” என்ற பெயரில் WhatsApp Chatbot சேவையை மருத்துவம், மருத்துவ கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வு அமைச்சர் அருண்ராஜ் தொடங்கி வைத்திருக்கிறார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இதய நோய் சிகிச்சைக்கான புறநோயாளிகள் பிரிவுக்கு மட்டும் தொடங்கப்பட்டுள்ள இந்த சேவை, படிப்படியாக மற்ற துறைகளுக்கும் விரிவுபடுத்தப்படும். பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளில் ஓபி (OP) சீட்டு பெறுவதற்காக நீண்ட நேரம் வரிசையில் காத்து நிற்பதைத் தவிர்க்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசு முதற்கட்டமாக 22 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளை இணைத்து ஒரு புதிய வாட்ஸ்அப் சாட்போட் சேவையைத் தொடங்கியுள்ளது.

அருண்ராஜ்

அருண்ராஜ்

பொதுமக்கள் 96192 22999 என்ற எண்ணை நலம்ஏஐ என்ற பெயரில் தங்கள் மொபைலில் சேமித்து, அதன் மூலம் வீட்டிலிருந்தபடியே புறநோயாளி சீட்டை (OP) ஆன்லைனில் எடுத்துக் கொள்ளலாம். இதன் மூலம் மருத்துவமனைக்குச் சென்றதும் வரிசையில் நிற்காமல், நேரடியாக மருத்துவரைப் பார்க்க முடியும்.

நாமக்கல், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, சேலம், நாகப்பட்டினம், திருப்பூர், அரியலூர், பெரம்பலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, சென்னை, திண்டுக்கல், மயிலாடுதுறை, திருப்பத்தூர், கன்னியாகுமரி, செங்கல்பட்டு ஆகிய 22 மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இந்த வசதி தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. மீதமுள்ள மாவட்டங்களுக்கும் இந்த சேவை விரைவில் விரிவுபடுத்தப்படும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *