EPFO, UMANG அப்டேட்: PF உறுப்பினர்களுக்கு வந்த முக்கிய புதிய வசதிகள்|New EPFO System Simplifies PF Claims, KYC and Account Access

Spread the love

> இனி இ.பி.எஃப்.ஓ உறுப்பினர் தளத்தில் (Member Portal) லாகின் செய்யும்போது, உறுப்பினர்கள் தங்களது உறுப்பினர் விவரங்கள், பிஎஃப் பேலன்ஸ், கிளைம் ஸ்டேட்டஸ், பென்ஷன் சேவைப் பதிவுகள் மற்றும் பெற்ற பலன்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் பார்த்துக்கொள்ளலாம்.

இதற்கு முன்பு, ஒவ்வொரு தகவல்களுக்கும் ஒவ்வொரு வலைதளத்தைப் பார்க்க வேண்டியதாக இருந்தது.

> இப்போது அத்தியாவசியத் தேவைகள், வீட்டுத் தேவைகள் மற்றும் சிறப்புச் சூழ்நிலைகள் என மூன்று பிரிவுகளின் கீழ், எளிதாக பகுதிப் பணம் எடுத்துக் கொள்ள முடியும்.

இந்த மூன்று பிரிவுகளின் கீழ், இனி மொத்த பி.எஃப் இருப்பில் 75% வரை பணமாக எடுக்க முடியும்.

> KYC மற்றும் சரிபார்ப்பு மூலம் ரூ.5 லட்சம் வரையிலான அட்வான்ஸ் கிளைம்கள் ஆட்டோ-செட்டில்மென்ட் செய்யப்படும். இது முன்பு ரூ.1 லட்சமாக இருந்தது.

> இதுவரை இறுதி பி.எஃப் செட்டில்மென்ட்களுக்கான வட்டி முந்தைய மாதத்தின் கடைசி நாள் வரை மட்டுமே என்று கணக்கிடப்பட்டது. ஆனால், புதிய முறையின் கீழ், இனி பணம் செலுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்படும் தேதி (Date of Payment Authorisation) வரை கணக்கிடப்படும். இதன் மூலம் இடையில் உள்ள நாள்களுக்கான கூடுதல் வட்டியும் உறுப்பினர்களுக்குக் கிடைக்கும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *