ஒரு நாளைக்கு 2 பூத்களின் மெஷின்களை சரிபார்க்கும் பணி நடந்தது. முதலில் ஏப்ரல் 23 ஆம் தேதி பதிவான வாக்குகளை சரிபார்த்துவிட்டு, பின்னர் ஒரு மாதிரி வாக்குப்பதிவு போல நடத்தி வாக்குகள் சரியாக விழுந்து பதிவாகிறதா என்பதை அரசியல் கட்சிகளின் முகவர்கள் முன்பு சரிபார்ப்பர். இந்த செயல்முறை இன்று வரை நடந்திருந்தது.
இடையில் திமுக சார்பில் இரண்டு பிரச்னைகள் எழுப்பப்பட்டது. விவிபாட் இயந்திரம் ஒன்று திடீரென பழுதானதை ஒரு புகாராக முன்வைத்தனர். பின்னர் இரண்டு மெஷின்களின் வெளிப்புறத்தில் சீரியல் நம்பர் இல்லை என்பதை புகாராக வைத்தனர்.
இந்த புகார்களை காரணம் காட்டி EVM சரிபார்க்கும் செயல்முறையிலிருந்து வெளியேறவும் செய்தனர். இதன் பிறகு தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் பழுதான மெஷின்களுக்கு பதிலாக வேறு பூத்களின் மெஷின்களை தேர்வு செய்து கொடுத்தனர். அந்த மெஷின்களும் சரிபார்க்கப்பட்டன. இறுதியில் கொளத்தூரின் EVM மெஷின்களில் எந்த கோளாறும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.