இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட நான்கு தீர்மானங்கள்…
> எஸ்.ஐ.ஆர் முழுமையாக ரத்து செய்க!,
> தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்து விசாரித்திடுக,
> ஜனநாயகத்திற்காகப் போராடும் மாணவர் இயக்கங்களுக்கு முழு ஆதரவு!,
> EVM-க்கு மாற்றாக மீண்டும் வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவருக!






> எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் மாநிலத்துக்கு மாநிலம் மாறும் காங்கிரஸின் நிலைப்பாட்டுக்கும், த.வெ.க.வின் மவுனத்துக்கும் கடும் கண்டனம்!
> மக்களின் வாக்குரிமையையும் இந்திய ஜனநாயகத்தையும் பாதுகாக்க, எஸ்.ஐ.ஆர் ரத்து மற்றும் வாக்குச்சீட்டு முறை ஆகிய இரு கோரிக்கைகளை வலியுறுத்திக் குடியரசுத் தலைவரிடம் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனு அளிப்பார்கள்!
திமுக vs காங்கிரஸ்
தமிழ்நாட்டின் கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, திமுக கூட்டணி முற்றிலும் உடைந்துவிட்டது. இப்போது தவெகவின் கூட்டணியில் காங்கிரஸ் இருந்து வருகிறது.
இதனால், தேர்தல் முடிவுகளுக்குப் பின், மத்தியில் நடந்த இந்தியா கூட்டணியின் எந்தக் கூட்டத்திலும் திமுக கலந்துகொள்ளவில்லை. அந்தக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாகவும் திமுக இன்னும் அறிவிக்கவில்லை.
மூன்றாம் அணி?
ஆனால், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இந்தியா கூட்டணியின் பிற தலைவர்களைச் சந்தித்து வருகிறார். இது திமுக ‘மூன்றாம் கூட்டணி’யை அமைக்கிறதா என்கிற சந்தேகத்தை எழுப்புகிறது.
மேலும், காங்கிரஸ் தலைமையில் டெல்லியில் எஸ்.ஐ.ஆருக்கு எதிராக இந்தியா கூட்டணி நடத்திய போராட்டத்தில் திமுக கலந்துகொள்ளவில்லை… ஆதரவும் கொடுக்கவில்லை.
ஆனால், மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்குத் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறது திமுக. இன்று தீர்மானமும் நிறைவேற்றியுள்ளது.
கூடவே, தவெகவுடன் காங்கிரஸிற்குக் கண்டனம் தெரிவித்துள்ளது திமுக.
இதெல்லாம் மூன்று கூட்டணியை திமுக அமைக்குமோ என்கிற சந்தேகத்தைத் தொடர்ந்து வலுவாக்கி வருகிறது.