Extremely Heavy Rain: ஒரே இரவில் கொட்டித் தீர்த்த 2,000 மி.மீ மழை, உருக்குலைந்த குன்னூர் மலைப்பாதை! – coonoor extremely heavy rain damage update.

Spread the love

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், நேற்று மாலை முதல் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பொழியத் தொடங்கியுள்ளது. குறிப்பாக குன்னூர், கோத்தகிரி, ஊட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நள்ளிரவில் இடைவிடாது கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. குறைந்த நேரத்தில் பெய்த மிக அதிக கனமழையால் நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியுள்ளது.

காட்டாற்று வெள்ளம் போல் தாழ்வான பகுதிகளில் ஆர்ப்பரித்ததால் குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையின் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. பர்லியார் அருகில் ஏற்பட்ட நிலச்சரிவில் அரசு பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் சிக்கியுள்ளன. பல இடங்களிலும் மரங்கள் சாலையின் குறுக்கே வேருடன் சாய்துள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மண்சரிவில் சிக்கியவர்களை‌ மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் பல பகுதிகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள‌ நிலையில்,கொடநாடு உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டுள்ளன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *