Biggboss Tamil 10:`ஒரு பொண்ணு கணவரை நினைச்சு ஃபீல் பண்ணா கூட தப்பா பேசுவீங்களா?’ – சாந்தினி தமிழரசன் | Biggboss chandini exclusive interview after biggboss

Spread the love

நான் ரொம்ப ரியல் ஆன பர்சன். விளையாட்டுக்காக அப்படி ஃபேக் ஆக விளையாடணும்னு எனக்கு இல்ல. 5வது வாரம் பிக்பாஸ் வீட்ல எனக்கு ரொம்ப மோசமான வாரம். ஏன்னா அஸ்மிதா எனக்கு நல்ல ஃப்ரெண்ட் ஆக இருந்தாங்க. அவங்க என் கூட சண்டை போட்டது எனக்கு ரொம்ப ஹர்ட் ஆகிடுச்சு. அவினாஷூக்கும் ஜேசனுகும் வந்த சண்டைல அவரும் ஹர்ட் ஆகி இருந்தார். அப்படித்தான் நாங்க ஃப்ரெண்ட் ஆக பேசிட்டிருந்தோம்.

ஃபேமிலியை விட்டுட்டு தனியா இருக்கோம். நான் ஜேசன் கூட டான்ஸ் ஆடணும்னு ஆசைப்படல. முத்தழகி தான் எங்களை ஆட சொல்றாங்க. அவர் எனக்கு டான்ஸ் ஆடத் தெரியாதுன்னு சொன்னார். அப்ப ஓ பேபி பாட்டு ஆடலாம்னு சொன்னேன். அந்த பாட்டுக்கு அவர் ஆடினப்ப எனக்கு என் கணவர் ஞாபகம் வந்துடுச்சு. அவரை ரொம்ப மிஸ் பண்ணேன். அவரை நினைச்சு ரியலா எமோஷனல் ஆகி அழுதேன். அதை கூட தப்பா பேசுவீங்களா? ஒரு பொண்ணு கணவரை நினைச்சு ஃபீல் பண்ணா கூட தப்பா பேசுவீங்களா? நந்தா ரொம்ப ஸ்வீட். அவர்கிட்ட நான் சாரி சொன்னேன். ஏன்னா, ஃபேமிலி ரவுண்ட்டுக்கு அவரை வீட்டுக்குள்ள வர வைக்கணும்னு நினைச்சிருந்தேன். அது முடியலைன்னு சாரி கேட்டேன். அவர்கிட்ட ஜேசன் பத்தி பேசும்போது, ̀நீ என்னைப் பத்தி தானே பேசியிருக்க.. இதுல என்ன இருக்கு?”னு சொன்னார். அவர் மட்டுமில்ல என் ஃப்ரெண்ட்ஸூம் அதைத்தான் சொன்னாங்க. ஒரு பொண்ணு சிரிச்சு பேசுனா தப்பா? நான் ஏன் சிரிக்கக் கூடாது?” என்றார்.

இன்னும் பல விஷயங்கள் குறித்து சாந்தினி நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் பண்ணவும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *