F-35 விமானத்தின் அருகே கூட விடமாட்டீங்க.. இதுல எங்களுக்கு விற்க போறீங்களா? அமெரிக்காவுக்கு குத்துவிட்ட இந்தியா | Your pepole don’t even let us go near the F-35 aircraft but you talk about selling it, IAF Chief AP Singh teases US

Spread the love

India

oi-Nantha Kumar R

டெல்லி: ”F-35 ரக விமானத்தின் அருகே கூட எங்களை விடுவது இல்லை. ஆனால் எங்களுக்கு எஃப் 35 ரக விமானங்களை விற்பது பற்றி பேசுகிறீர்கள்” என்று அமெரிக்க விமானப்படை தளபதி ஜெவின் ஷ்னீடருக்கு, நம் நாட்டின் விமானப்படை தளபதி ஏபி சிங் குத்துவிட்டு அமெரிக்காவின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியது கவனம் பெற்றுள்ளது.

your-pepole-dont-even-let-us-go-near-the-f-35-aircraft-but-you-talk-about-selling-it-iaf-chief-ap

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ‘தரங் சக்தி-2026’ (Tarang Shakti-2026) என்ற பன்னாட்டு விமானப்படை பயிற்சி நடந்தது. இந்த பயிற்சியின் நிறைவு விழாவில் அமெரிக்க பசிபிக் விமானப்படை தளபதி ஜெனரல் கெவின் ஷ்னீடருடன், நம் நாட்டின் விமானப்படை தளபதி ஏபி சிங்

இந்நிலையில் தான் அமெரிக்க பசிபி விமானப்படை தளபதி ஜெனரல் கெவின் ஷ்னீடருடன் இணைந்து நம் நாட்டின் விமானப்படை தளபதி ஏபி சிங் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு இருவரும் பதிலளித்து வந்தனர்.

இந்த வேளையில் பத்திரிகையாளர் ஒருவர், ”இந்தியாவிற்கு 5ம் தலைமுறையை சேர்ந்த எஃப் 35 ரக போர் விமானங்களை அமெரிக்கா தருவதாக சொல்லியுள்ளதே” என்ற கேள்வியை முன்வைத்தார். அதற்கு ஏபி சிங், ”எஃப் 35 ரக போர் விமானங்களை விற்பனை செய்வது தொடர்பாக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக எந்த ஆஃபரையும் நமக்கு வழங்கவில்லை. பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் அமெரிக்க தளபதியுடன் கூட இப்பதான் நான் சொன்னேன்.

உங்க ஆளுங்க எங்களை அந்த விமானத்தின் பக்கத்துல கூட போகவிடமாட்டேங்குறாங்க. இதுல அதை எங்களுக்கு போறாம்னு மட்டும் பேசுகிறீங்க என்றேன்” என்ற கிண்டலாக பேசினார். அமெரிக்காவை எடுத்து கொண்டால் கடந்த ஆண்டு முதல் நம் நாட்டுக்கு 5ம் தலைமுறையை சேர்ந்த எஃப் 35 ரக ஸ்டெல்த் போர் விமானத்தை வழங்குவதாக டிரம்ப் கூறி வருகிறார்.

பொதுவெளியில் வாய்மொழியாக இப்படி கூறும் டொனால்ட் டிரம்ப் அதுபற்றி அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதுதொடர்பாக நம் நாட்டிடமும் பேசுவது கிடையாது. தங்களை பொதுவெளியில் தாராளவாதியாக காட்டி கொள்வதற்காக அமெரிக்கா பல்வேறு விஷயங்களில் இப்படி இரட்டை வேடம் போடுவது உண்டு. எஃப் 35 ரக போர் விமான விவகாரத்தில் அமெரிக்கா இப்படி தான் இரட்டை வேடம் போடுகிறது. இதனால் தான் கிண்டல் தொனியில்அமெரிக்க விமானப்படை தளபதியை பக்கத்தில் வைத்து கொண்டே அவர்களின் சுயரூபத்தை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளார் நம் நாட்டின் விமானப்படை தளபதி ஏபி சிங்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *