டெல்லி: “என் நண்பனைக் கைது செய்துள்ளனர்”- மும்பையில் போலீஸ் வேனை மறித்த காக்ரோச் கட்சி பெண் ஆதரவாளர் | “They have taken my friend away”: Female supporter of the ‘Cockroach Party’ intercepts police van in Mumbai

Spread the love

டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சியினர் தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாரை பதவியில் இருந்து விலக கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இப்போராட்டத்தில் பங்கேற்க வந்த காக்ரோச் ஜனதா கட்சி தலைவர்களை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர். டெல்லியைத் தொடர்ந்து மும்பையிலும் காக்ரோச் ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

தாதர் சிவாஜி பூங்காவில் நடந்த இப்போராட்டத்தின்போது ஒரு பெண் போலீஸ் வேன் முன்பு நின்று கொண்டு வேனை மறித்து எனது நண்பனைக் கைது செய்துள்ளார் என்று தெரிவித்தார்.

அங்கிருந்து விலகும்படி போலீஸார் கேட்டுக்கொண்டனர். ஆனால் அப்பெண் விலகவில்லை. இதையடுத்து அப்பெண்ணை போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

மும்பையில் போராட்டம்

மும்பையில் போராட்டம்

இது தொடர்பான காணொலி சமூக ஊடகங்களில் வைரலாகி இருக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்தின்போது மும்பை முழுவதும் 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நூற்றுக்கணக்கானோர் ஆகஸ்ட் கிராந்தி மைதானம், அருகிலுள்ள நானா சௌக் ஆகியவற்றில் கைது செய்யப்பட்டனர்.

மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி, இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். முன்னதாக சனிக்கிழமையன்று துஷார் காந்தி போராட்டம் நடைபெறும் இடத்தை நோக்கிச் செல்லும்போது கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் கோரிக்கையை வலியுறுத்தி ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் நடந்த போராட்டம் தொடர்பாக மும்பை காம்தேவி காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

நடிகர் இம்ரான் கான் இப்போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக அவரது பெண் தோழியுடன் கைது செய்யப்பட்டார். கடந்த ஜூலை 22 அன்று மும்பை சிவாஜி பூங்காவில் நீட் தேர்வுத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டத்தின் போது போராட்டக்காரர்களைக் கைது செய்து அழைத்துச் சென்ற போலீஸ் வேனை மாடல் அழகி ரியா யாதவ் அஹிர் தடுத்து நிறுத்தினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *