Flydubai சம்பவம்: "இந்தப் பயங்கரவாத தாக்குதல் 'இந்த' இரண்டின் மீதான தாக்குதலாகும்!" – இஸ்ரேல்

Spread the love

கடந்த 30-ம் தேதி, துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ்விற்குச் சென்ற ஃபிளைதுபாய் நிறுவனத்தின் விமானம் ஒன்றைத் தகர்க்கப் பார்த்த சம்பவம் ஒன்று நடந்தது.

இந்த விபரீதத்தைத் தடுக்க முயன்ற இந்தியாவைச் சேர்ந்த விமானி ஸ்மித் மச்சாரை சம்பவத்திற்குக் காரணமான சக விமானி ஹமாம் அல்-ஹம்மாமி கோடாரியால் தாக்கியிருந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து இஸ்ரேலின் வெளியுறவுத் துறை அமைச்சகம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளது.

இஸ்ரேல் வெளியுறவுத் துறை பதிவு
இஸ்ரேல் வெளியுறவுத் துறை பதிவு

இஸ்ரேல், அமீரகம், இந்தியா…

“டெல் அவிவ் சென்ற ‘ஃபிளைதுபாய்’ விமானத்தின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலானது, வெறும் இஸ்ரேலியர்களுக்கு எதிரான தாக்குதல் மட்டுமல்ல.

அது இஸ்ரேல்-அமீரக உறவு மற்றும் ‘ஆபிரகாம் உடன்படிக்கை’ மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும்.

ஆனால், இந்தப் பயங்கரவாதத்திற்கு எதிராக இஸ்ரேலியர்களும், அமீரகத்தினரும், இந்தியர்களும் இணையற்ற தைரியத்துடன் ஒன்றாக இணைந்து நின்றதை உலகம் கண்டது.

நமது பிராந்தியத்தில் ஏற்பட்டு வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றங்களையும் வளர்ச்சியையும் எந்தவொரு பயங்கரவாதத்தாலும் ஒருபோதும் தடம்புரளச் செய்ய முடியாது.”

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *