‘ஃபிளைதுபாய்’ FZ 1073 விமானம் நேற்று முன்தினம் (செப்டம்பர் 30) துபாய் நேரப்படி, காலையில் துபாயிலிருந்து கிளம்பியுள்ளது.
இந்த விமானம் இஸ்ரேலின் டெல் அவிவ்வை நோக்கிப் பறந்திருக்கிறது. இந்த விமானத்தில் 174 பேர் பயணித்திருக்கின்றனர். அதில் பெரும்பான்மையானவர்கள் இஸ்ரேலியர்கள்.
விமானப் பயணம் தொடங்கிய கிட்டத்தட்ட 2 மணிநேரத்தில், விமானம் பறந்த தளத்திலிருந்து கீழே இறங்கியிருக்கிறது.
அந்த விமானத்திலிருந்து பொது அவசரக் கோடான 7700 சிக்னல் வந்துள்ளது. அடுத்த சில நிமிடங்களிலேயே விமானக் கடத்தல், விமான ஆக்கிரமிப்புக் கோடான 7500 ஆகச் சிக்னல் மாறியுள்ளது.

ஏன் இந்தச் சிக்னல்கள்… இந்த விமானத்தில் என்னதான் நடந்தது?
குறிப்பிட்ட இந்த ஃபிளைதுபாய் விமானத்தின் விமானிகளில் ஒருவர் இந்தியர். இவர் ஸ்மித் மச்சார். இவர் முதன்மை விமானியும் கூட.
இன்னொரு விமானி ஓமன் நாட்டைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இவரால்தான் விமானத்தில் அத்தனைப் பிரச்னையுமே.
விமானப் பயணத்தின்போது, அந்த விமானத்தைத் தகர்க்கப் பார்த்திருக்கிறார் அந்த விமானி என்று கூறப்படுகிறது.
இவரைத் தடுக்க முயன்ற ஸ்மித் மச்சாரை கத்தியால் குத்தியுள்ளார்.
கத்திக்குத்துக்குப் பிறகுமே, ஸ்மித் மச்சார் விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்க முயன்றிருக்கிறார்.
ஒருகட்டத்தில் முடியாமல் போக, காக்பிட் கதவைத் திறந்துவிட்டுள்ளார்.