Former AIADMK Minister Shanmuganathan’s daughter, Ponnarasi, has joined TVK—what is the backstory-த.வெ.கவில் இணைந்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகள் பொன்னரசி- பின்னணி என்ன

Spread the love

தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.கவின் முகமாக பார்க்கப்பட்டு வருபவர் சண்முகநாதன். ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில்  அ.தி.மு.க வேட்பாளராகப் போட்டியிட்டு கடந்த 2001, 2011, 2016 ஆகிய மூன்று தேர்தல்களில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தவர். அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் இந்து சமய அறநிலையத்துறை, சுற்றுலாத்துறை, பால்வளத்துறை உள்ளிட்ட ஆகிய துறைகளின் அமைச்சராகவும்  இருந்தவர். தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளராக பொறுப்பு வகித்து வந்துள்ளார்.  

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளராக பதவி வகித்து வந்த  முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, கடந்த சில மாதங்களுக்கு முன்பு த.வெ.கவில் இணைந்தார். இதனையடுத்து ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்டச் செயலாளராக சண்முகநாதன் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், சண்முகநாதனின் மகள்  மருத்துவரான பொன்னரசி மற்றும் அவரது கணவர் அசோக் ஆகியோர் த.வெ.க., மத்திய மாவட்டச் செயலாளரும், மீன்வளத்துறை அமைச்சருமான ஸ்ரீநாத் முன்னிலையில் இருவரும் அக்கட்சியில் இணைந்துள்ளார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *