“காங்கிரஸ் பாரம்பர்யம் உள்ளவரால் இங்கே தொடர முடியாது..!”- பாஜகவிலிருந்து விலகினார் பத்மஜா வேணுகோபால்

Spread the love

கேரள மாநில முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைருமான மறைந்த கே.கருணாகரனின் மகள் பத்மஜா வேணுகோபால். இவரது சகோதரர் கே.முரளீதரன் கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சராக உள்ளார். பத்மஜா வேணுகோபால் முன்பு காங்கிரஸ் கட்சியில் முக்கிய பதவிகளில் இருந்தார். 2016 மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல்களில் திருச்சூர் தொகுதியிலும், 2004 மக்களவைத் தேர்தலில் முகுந்தபுரம் தொகுதியிலும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு அவர் தோல்வியடைந்தார். கட்சியில் தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமல் புறக்கணிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டி காங்கிரஸில் இருந்து விலகினார். பின்னர் கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் பா.ஜ.க-வில் இணைந்தார். டெல்லியில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் மூத்த தலைவர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் அக்கட்சியின் உறுப்பினர் அட்டையைப் பெற்றுக்கொண்டார். காங்கிரஸில் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறி பா.ஜ.க-வில் இணைந்த பத்மஜாவுக்கு, அங்கும் எதிர்பார்த்த அளவிற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், அவர் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே திரும்பப் போவதாகக் கடந்த சில நாட்களாகவே கேரள அரசியலில் தகவல்கள் பரவி வந்தன. இந்த நிலையில் தற்போது பா.ஜ.க-வில் இருந்து விலகியுள்ளார் பத்மஜா வேணுகோபால்.

பா ஜ.க-வில் இருந்து பத்மஜா வேணுகோபால் விலகியதற்கான ராஜினாமா கடிதத்தைக் கட்சித் தலைமையிடம் சமர்ப்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காக பா.ஜ.க-வில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். அதே சமயம் பா.ஜ.க-வில் இணைந்தது தவறான முடிவு என்றும், தற்போது அந்தத் தவறைத் திருத்திக் கொள்வதாகவும் பத்மஜா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *