‘G.P.F. மற்றும் ‘போஸ்ட் ஆஃபீஸ்’ வேலைக்கு ஆவாதா? ‘இரண்டாவது PF’ பெற என்ன செய்யணும்?

Spread the love

காலை 9:45 மணிக்கு அவசரமாக வண்டியைப் பார்க் செய்துவிட்டு, பயோமெட்ரிக்கில் விரல் வைத்துவிட்டு, கொண்டுவந்த டிபன் கேரியரை டேபிளுக்குக் கீழே வைத்துவிட்டு சீட்டில் அமர்ந்தால்… அடுத்த விநாடி ஆரம்பமாகிறது உங்களின் ஓட்டம்.

ஊரார் கண்ணுக்கு நீங்கள் ஒரு “அரசாங்க அதிகாரி’. “அவருக்கு என்னப்பா, லைஃப் செட்டில்ட். மாசம் பிறந்தா சம்பளம், ரிட்டையர் ஆனா பென்ஷன்” என்று உறவினர்கள் மத்தியில் உங்களுக்கு ஒரு பெரிய மரியாதை உண்டு. ஆனால், யாருக்கும் தெரியாத ஒரு நிஜம் உங்கள் மனதுக்கு மட்டும்தானே தெரியும்?

ஒன்றாம் தேதி பேங்கில் இருந்து ‘Salary Credited’ என்று மெசேஜ் வரும்போதே, பத்தாம் தேதிக்குள் ஹவுசிங் லோன் இஎம்ஐ, பர்சனல் லோன் டியூ, குழந்தைகளின் ஸ்கூல்/காலேஜ் ஃபீஸ், மளிகை, பெட்ரோல், ஏலச்சீட்டு, எல்.ஐ.சி பிரீமியம் என எல்லாமே போக, மீதமுள்ள சிறு தொகையை வைத்துக்கொண்டு அடுத்த 20 நாட்களை ஓட்டுவதற்குள் நடக்கும் அந்த மனப்போராட்டம், ஒரு குடும்பத் தலைவனாக உங்கள் பொறுப்பைக் காட்டுகிறது. நீங்கள் கடந்த 10, 15 வருடங்களாக உழைத்துக்கொண்டே இருக்கிறீர்கள். ஆனால், மாதக்கடைசியில் ‘ஏன் எப்போதுமே பண நெருக்கடியிலேயே இருக்கிறோம்?’ என்ற கேள்வி உங்களை உறங்கவிடாமல் செய்கிறதா?

Confused Person | Investment

Confused Person | Investment

அந்த மாயையான ‘பாதுகாப்பு உணர்வு’

ஒரு அரசு ஊழியராக உங்கள் முதலீடு எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியும். பி.எஃப் (GPF), ரெக்கரிங் டெபாசிட் (RD), போஸ்ட் ஆஃபீஸ், மற்றும் ஒன்றிரண்டு எண்டோவ்மென்ட் பாலிசிகள். இவையெல்லாம் ‘பாதுகாப்பானவை’ என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உங்கள் ரத்தத்தில் ஊறியிருக்கிறது. ஏனென்றால், நம் அப்பாக்களும் தாத்தாக்களும் இதைத்தான் செய்தார்கள்.

ஒரு கசப்பான உண்மையைச் சொல்லட்டுமா? அன்றைக்கு இருந்த வாழ்க்கைச் செலவுகளும், தேவைகளும் வேறு. இன்றைக்கு நிலைமை வேறு. உங்கள் பணம் அந்தப் பழைய திட்டங்களில் ‘பாதுகாப்பாக’ பெட்டிக்குள் தூங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் அது வளரவில்லை!

ஒவ்வொரு முறையும் அரசாங்கம் ‘அகவிலைப்படி’ (DA) ஏற்றும்போது நீங்கள் சந்தோஷப்படுகிறீர்கள். ஆனால், நிஜத்தில் கல்விச் செலவும், மருத்துவச் செலவும் அதைவிட இரண்டு மடங்கு வேகத்தில் எகிறிக்கொண்டிருக்கிறது. 6% முதல் 7% வரை உள்ள பணவீக்கத்தை (Inflation), உங்கள் 7.1% ரிட்டர்ன் தரும் பாரம்பரிய முதலீடுகள் எப்படிச் சமாளிக்கும்? உங்கள் கண் முன்னே உங்கள் பணத்தின் மதிப்பு தேய்ந்துகொண்டிருக்கிறது. எப்போதுமே ‘சேஃப்’ ஆக ஆடுகிறோம் என்று நினைத்து, உங்கள் எதிர்காலத்தையே மிகப்பெரிய ரிஸ்க்கில் தள்ளிக்கொண்டிருக்கிறீர்கள்!

NPS - Pension - பென்ஷன்

NPS – Pension – பென்ஷன்

‘கூடுதல் பென்ஷன்’ என்ற மாற்று வழி!

இன்னும் சில வருடங்களில் உங்கள் மகளின்/மகனின் திருமணமோ, உயர்கல்வியோ வரும்போது, 15 வருடங்கள் அரசாங்கத்தில் வேலை பார்த்தும் ஒரு பர்சனல்/எஜுகேஷன் லோனுக்காக பேங்கில் போய் நிற்கப் போகிறோமா? அல்லது நீங்கள் சேர்த்த வாய்த்த பணத்திலேயே காரியத்தை சிறப்பாக செய்திட முடியுமா?

60 வயதில் ரிட்டையர் ஆகும்போது, வரும் அந்த ஒற்றைப் பென்ஷனை (Pension) வைத்துக்கொண்டு, மருத்துவச் செலவுகளையும் சமாளித்து, யாருடைய தயவும் இல்லாமல் தலைநிமிர்ந்து வாழ முடியுமா?

கண்டிப்பாக முடியும்! ஆனால், அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். உங்களின் மிகப்பெரிய பலமான ‘மாதாந்திர முதலீட்டு ஒழுங்கை’ சரியான திசையில் திருப்புவது.

பங்குச்சந்தை என்றாலே ஏதோ சூதாட்டம், அது நமக்கு செட் ஆகாது என்ற பயத்தை விடுங்கள். உங்கள் மாதச் சம்பளத்தில் ஒரு சிறு தொகையை, நல்ல தரமான மியூச்சுவல் ஃபண்டுகளில் (Mutual Funds) SIP முறையில், எந்த ஆரவாரமும் இல்லாமல் தொடர்ந்து முதலீடு செய்து வாருங்கள்.

‘கூட்டுவட்டி’ (Power of Compounding) என்னும் மேஜிக் உங்கள் பணத்தை பல மடங்காகப் பெருக்கும். 60 வயதில் அரசாங்கம் தரும் பென்ஷனை விட, உங்கள் முதலீடு உங்களுக்குத் தரும் ‘இரண்டாவது பென்ஷன்’ மிகப் பெரியதாக இருக்கும்!

இந்த ரகசியத்தை எப்படிக் கற்றுக்கொள்வது?

Labham Workshop for Government Employees, April 22 2026

Labham Workshop for Government Employees, April 22 2026

இந்த ஆன்லைன் வழிகாட்டலில் நீங்கள் என்ன தெரிந்துகொள்வீர்கள்?

வெறும் சேமிப்பு ஏன் உங்களைக் கோடீஸ்வரன் ஆக்காது என்பதற்கான கணிதம்.

60 வயதில் நீங்கள் விரும்பிய வாழ்க்கையை வாழ, உண்மையாகவே எவ்வளவு கார்பஸ் (Corpus) தேவை?

ஒரு சாமானிய அரசு ஊழியரின் சிறிய முதலீடு, எப்படி 15-20 வருடங்களில் மிகப்பெரிய செல்வமாக மாறுகிறது?

எந்தவித ரிஸ்க்கும் இன்றி, உங்கள் வயது மற்றும் பொறுப்புகளுக்கு ஏற்ற பாதுகாப்பான மியூச்சுவல் ஃபண்டுகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

எகுழந்தைகளின் உயர்கல்வி, திருமணம் மற்றும் உங்கள் ஓய்வுக்காலம்… மூன்றையும் ஒரே சம்பளத்தில் எப்படிக் கையாளுவது?

SWP Benefits |Happy Retirement

SWP Benefits |Happy Retirement

நாளுக்கு நாள் அதிகரிக்கும் செலவுகளைப் பார்த்து, எதிர்காலம் குறித்து உள்ளுக்குள் பயந்துகொண்டிருக்கும் அரசு ஊழியர்கள்.

தன் பிள்ளைகளுக்குத் தன்னைப்போல ஒரு நடுத்தர வர்க்கப் போராட்டத்தைக் கொடுக்காமல், மிகப்பெரிய நிதிப் பாதுகாப்பை உருவாக்கத் துடிக்கும் பொறுப்பான தந்தைகள்.

“பழைய பென்ஷன் திட்டம் வருமா, வராதா?” என்று மற்றவர்களை நம்பிக் காத்துக்கொண்டிருக்காமல், தன் ஓய்வுக்காலச் செல்வத்தைத் தன் கைகளாலேயே உருவாக்க நினைக்கும் சுயமரியாதை உள்ளவர்கள்.

உங்கள் குடும்பத்தின் அஸ்திவாரம் நீங்கள். உங்கள் நிதிச் சுதந்திரத்திற்கான முதல் படியை இன்றே எடுத்து வையுங்கள்!

(இது அரசு ஊழியர்களுக்காகப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட நேரலை வெபினார். உங்கள் அலுவலக நண்பர்களுக்கும் இதைப் பகிர்ந்து, அவர்களையும் முன்பதிவு செய்யச் சொல்லுங்கள். அனுமதி இலவசம்!)

நிகழ்ச்சிக்கு முன்பதிவு செய்ய: https://labham.money/events/webinar-apr22-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_apr22_2026

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *