‘மார்ச் 10-ம் தேதி முதல்தான் தலைவர் வேட்பாளர்களை இறுதி செய்து தொகுதிக்கு அனுப்பினார். ஆனால், அதற்கு 3-4 மாதங்களுக்கு முன்பாகவே தலைவரின் உத்தரவோடு அருண்ராஜ் திருச்செங்கோடுக்கு வந்துவிட்டார். கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் வேலைகளைத்தான் முதலில் கையில் எடுத்தார். ஒவ்வொரு பூத்துக்கும் ஆக்டிவாக வேலை செய்யக்கூடிய 5 பேரை நியமித்து அவர்களுக்குத் தேர்தல் மற்றும் வாக்குச்சேகரிப்பு குறித்த தெளிவான புரிதலை ஊட்டினார். தேர்தலில் இவ்வளவு நுணுக்கமாக வேலை செய்ய வேண்டுமென்பதே எங்களுக்கு அப்போதுதான் தெரிய வந்தது.

‘மக்களிடம் செல், மக்களிடம் வாழ், மக்களிடமிருந்து கற்றுக்கொள்’ என்பது அண்ணாவின் கூற்று. இதை எங்களின் தலைவரும் பல மேடைகளில் கூறியிருக்கிறார். கட்சிக்குள் அந்த கூற்றுக்கு முன்னுதாரணமாக செயல்பட்டவர் அருண்ராஜ்தான். தினசரி மக்களை பார்க்க கிளம்பி விடுவார். ஒரு நாள் ஆட்டோ ஓட்டுநர்களோடு காக்கிச் சட்டையோடு நிற்பார். அவர்களின் அன்றாட சிக்கல்களை உடனிருந்து கேட்டுத் தெரிந்துகொள்வார். இன்னொரு நாள் விவசாயிகளோடு இருப்பார். மற்றொரு நாள் இளைஞர்களோடு இருப்பார்.
அருண்ராஜின் சொந்தத் தொகுதி என்பதால், மக்களுக்கும் அவருக்கும் ஏற்கனவே தொடர்பு இருந்தது. மக்களோடு அவர் நெருங்கிச் செல்லும் பாங்கு அதை இன்னும் வலுப்படுத்தியது. மேலும், இதுவரை தொகுதியை கையில் வைத்திருந்த எம்.எல்.ஏ-க்கள் மக்களை வெறும் வாக்குகளாக மட்டுமே பார்த்தனர், அவர்களுக்கு பின்னால் இருக்கும் வலியையும் வாழ்வையும் யாரும் பார்க்கவில்லையே! தங்களின் உரிமைக் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கவில்லையே என்கிற ஏக்கம் தொகுதி மக்களுக்கு இருந்தது. அதையெல்லாம் தீர்த்து வைக்கும் வல்லமையோடு அருண்ராஜ் களத்தில் நிற்பதால்தான் மக்கள் மத்தியில் அவருக்கு இத்தனை வரவேற்பு” என்கின்றனர் லோக்கல் த.வெ.க நிர்வாகிகள்.

அருண்ராஜும் மக்களின் எண்ணங்களை புரிந்துகொண்டு தொகுதிக்கென ஸ்பெஷலாக ஜி5 என்ற பெயரில் திட்டங்களை அறிவித்திருக்கிறார். ‘திருச்செங்கோட்டின் புராதன கோவில்களின் சிறப்பை உலகறிய செய்யும் வகையில் ஆன்மிக சுற்றுலா ஊக்குவிக்கப்படும். ரிக் தொழிலின் தலைநகரமாக தொகுதியை மாற்றும் வகையில் சிப்காட், டைடல் பார்க் போன்றவை நிறுவப்படும். மாணவ, மாணவிகளின் ஆற்றலை மேம்படுத்த திறன்வளர் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். சாலை, குடிநீர், அரசு மருத்துவமனை, அரசுப்பள்ளி போன்ற அடிப்படைக் கட்டமைப்புகள் வியத்தகு வகையில் மெருகேற்றப்படும். பருத்தி விவசாயத்தை செழிக்க வைக்கும் வகையில் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும்’ அருண்ராஜ் அறிவித்திருக்கும் இந்தத் திட்டங்களுக்கான வரவேற்பைத் தொகுதியில் கண்கூடாக பார்க்க முடிகிறது” என்கின்றனர்.
‘வாயா… ராசா…’ என 60 வயது பாட்டி தொடங்கி, ‘ஹாய்… மாமா’ எனச் சிறுவர்கள் ஹைபை கொடுக்கும் அளவுக்கு மக்களோடு மக்களாக கலந்து நிற்கிறார் அருண்ராஜ். ‘மக்களோடு மக்களாக நிற்பவருக்கு வெற்றி மட்டுமே ஒரே முடிவாக கிடைக்கப் போகிறது. தலைவரோடு சட்டமன்றத்துக்கு சென்று எங்களின் உரிமைக்குரலாக ஒலிக்கப் போகிறார் அருண்ராஜ்” என்கின்றனர் த.வெ.க-வினர்.