Gandhi Jayanti: ராஜ்காட்டில் மகாத்மா காந்திக்கு பிரதமர் மோடி மரியாதை.. முதல்வர் விஜய் புகழாரம் | Gandhi Jayanti 2026: PM Modi, Tamil Nadu CM Vijay Pay Tribute to Mahatma Gandhi

Spread the love

India

oi-Pavithra Mani

காந்தி ஜெயந்தி: காந்தி ஜெயந்தியையொட்டி நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் பிறந்த நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினர். காந்தியடிகளின் கொள்கைகள் மற்றும் தியாகங்களை நினைவுகூர்ந்து பிரதமர் மோடி, தமிழக முதல்வர் விஜய் உள்ளிட்டோர் சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.

நாடு முழுவதும் காந்தி ஜெயந்தி இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, டெல்லி ஆளுநர் தரன்ஜித் சிங், மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் மலர்கள் தூவி, மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, பிரார்த்தனை, பஜனைப் பாடல் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெற்றன.

gandhi jayanti narendra modi vijay

பிரதமர் மோடி

காந்தி ஜெயந்தியையொட்டி, பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது: மகாத்மா காந்தியின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் சத்தியம், அகிம்சை, கருணை மற்றும் சேவை ஆகியவற்றின் ஒளிவிளக்காக திகழ்கிறது. இது ஒவ்வொரு காலத்திலும் மனிதகுலத்திற்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக தொடர்ந்து விளங்கும்.எல்லா உயிர்களிடமும் பகையற்றவராகவும், நட்புணர்வும் கருணையும் கொண்டவராகவும் இருப்பவர். எனது என்ற பற்றும் அகந்தையும் இல்லாதவர். இன்பத்தையும் துன்பத்தையும் சமமாகக் கருதுபவர். பொறுமை கொண்டவர் என்று பதிவிட்டுள்ளார்.

முதல்வர் விஜய் பதிவு

காந்தி ஜெயந்தியையொட்டி, முதல்வர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: அகிம்சை என்னும் பேராயுதத்தால் உலகையே வியக்க வைத்து, இந்தியத் திருநாட்டிற்கு விடுதலையைப் பெற்றுத்தந்த மாபெரும் தலைவர், நமது தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளில் அவரது தேசப்பற்றையும், தியாக வாழ்வையும் போற்றி வணங்குகிறேன்.

எளிமை, நேர்மை, மனிதநேயம், சமத்துவம், சமூக நல்லிணக்கம் ஆகியவற்றைத் தனது வாழ்வின் நெறிகளாகக் கொண்டு, உலகம் முழுமைக்கும் அன்பையும், சகோதரத்துவத்தையும் பரப்பிய மாமனிதராகத் திகழ்ந்தவர்.

மகாத்மா காந்தியடிகளின் கனவுகளை நனவாக்கி, அமைதியும், நல்லிணக்கமும், சகோதரத்துவமும் தழைத்திடும் சமூகத்தை உருவாக்கி, நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாத்து, அவர் காட்டிய அறவழியில் நமது வெற்றிப் பயணத்தைத் தொடர்வோம் என்று தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *