விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டா குஸ்தி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் திரைப்படம் ஜூலை 3 அன்று வெளியானது.
2022, டிசம்பர் 2 அன்று வெளியான “கட்டா குஸ்தி’ முதல் பாகம் ரசிகர்களிடம் பெற்ற பெரும் வரவேற்பைத் தொடர்ந்தே இதன் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டது. இரண்டாம் பாகமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்தப் படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு விலையுயர்ந்த காரை பரிசளித்தார்.
அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வில் பேசிய நடிகர் விஷ்ணு விஷால், “படத்தின் தயாரிப்பாளர் என்னை முழுமையாக நம்பி, எந்தக் கேள்வியும் கேட்காமல் ‘ஃப்ரீ ஹேண்ட்’ கொடுத்ததே இந்த வெற்றிக்குக் காரணம். அந்த நம்பிக்கையே அன்பின் ஆகச்சிறந்த வடிவம். இயக்குநர் செல்லாவோடு 11 ஆண்டு காலப் பழக்கம் உள்ளது. அவர் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. பிற்காலத்தில் அவர் மிகப்பெரிய கமர்சியல் இயக்குநராக வருவார்.