Miss Universe India 2026: “மூன்றாண்டுக்கால உழைப்புக்குக் கிடைத்தது..!” – காசியா லிஸ் மேஜோ பேச்சு! | Kasiya Liz Majo from Kerala has won the Miss Universe India 2026 title.

Spread the love

Miss Universe India 2026 பட்டம் வென்ற காசியா லிஸ் மேஜோ, வரும் நவம்பர் மாதம் போர்ட்டோ ரிகோவில் நடைபெறவுள்ள 75-வது உலகளாவிய ‘மிஸ் யூனிவர்ஸ்’ (Miss Universe) அழகிப் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்கவுள்ளார். இந்த வெற்றி குறித்துப் பேசிய அவர், “நான் உலகின் உச்சிக்கே சென்றுவிட்டது போல் உணர்கிறேன். கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நான் உழைத்த உழைப்பிற்கு கிடைத்த மிகச் சிறந்த தருணம் இது. இந்த மகுடத்தை என் சொந்த மாநிலமான கேரளாவுக்குக் கொண்டு செல்வதிலும், என் ஊரை உலகிற்கு அடையாளப்படுத்தி, அதை உலகளாவிய மேடைக்கு எடுத்துச் செல்வதிலும் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய போராட்டம் என்பது எப்போதும் நமக்குள்ளேயே இருக்கும் போராட்டம்தான். நாம் நினைப்பதை விடவும் நமக்கு அதிக தகுதி இருக்கிறது என்பதை நாமே நம்புவதுதான் அது. வெறும் 19 வயதில் மிஸ் யூனிவர்ஸ் இந்தியா போன்ற ஒரு பெரிய மேடையில் நிற்பதற்கு மிகுந்த துணிச்சலும் மன தைரியமும் தேவைப்பட்டது. அந்தத் தடைகளை கடந்து வந்ததாலேயே இன்று இந்த கிரீடத்துடன் நிற்கிறேன். உலகளாவிய மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை இந்தியாவிற்குப் பெற்றுத் தருவதே என் முதல் இலக்கு. நான் செய்யும் ஒவ்வொன்றிலும் இந்தியாவையும் கேரளாவையும் பெருமையுடன் பிரதிநிதித்துவப்படுத்துவேன்.” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *