காசாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த 15 அம்ச அமைதித் திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
கடந்த 2023 அக்டோபர் 7 அன்று, காசாவில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து, ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர், 251 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். அதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கையில் காசாவில் 73,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஐநா தகவல்படி, காசாவின் சுமார் 19 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து இடம்பெயர்ந்துள்ளனர்.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே தொடர்ந்து தாக்குதல் நடந்துவருகிறது. கடந்த அக்டோபர் மாதம் போர்நிறுத்தத்திற்குச் சம்மதித்த பிறகும் காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில், இஸ்ரேல் தனது தாக்குதல்களை முழுமையாக நிறுத்திவிட்டு படைகளைத் திரும்பப் பெற்றால், எங்கள் கனரக ஆயுதங்களை ஒப்படைப்போம் என்று ஹமாஸ் நிபந்தனையுடன் தெரிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து ஹமாஸ் உள்ளிட்ட ஆயுதக் குழுக்களின் முழுமையான ஆயுதக் களைவுக்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. எனவே, இருதரப்பும் டொனால்ட் ட்ரம்பின் அமைதித் திட்டமான 15 அம்சக் ஆவணத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.” என அமெரிக்காவின் “சமாதான வாரியம்’ (Board of Peace) அறிவித்திருந்தது.