Gen Z’s Cockroach Janata Party: இணையத்தைக் கலக்கும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி!

Spread the love

இந்திய சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக “காக்கரோச் ஜனதா கட்சி’ (CJP) என்ற புதிய நையாண்டி இயக்கம் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. வெறும் இரண்டு நாட்களில் 40,000 உறுப்பினர்களை ஈர்த்த இந்த அமைப்பு, தற்பொழுது 70,000-க்கும் அதிகமான ஆதரவாளர்களுடன் இணையத்தில் மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது.

தற்போதைய சமூக-அரசியல் சூழலையும் நிர்வாக அமைப்பையும் கடுமையாக விமர்சிக்கும் நோக்கில், இன்றைய இளைஞர்களால் உருவாக்கப்பட்ட ஒரு நையாண்டி இயக்கமாக இது உருவெடுத்துள்ளது.

அண்மையில் நீதிமன்ற வழக்கு ஒன்றின் போது, வேலையில்லாத் திண்டாட்டம் குறித்துப் பேசிய இளைஞர்கள் ‘கரப்பான்பூச்சிகள்’ மற்றும் ‘ஒட்டுண்ணிகள்’ என விமர்சிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த Gen Z தலைமுறையினர், தங்களை நோக்கி வீசப்பட்ட விமர்சனத்தையே தங்களின் அடையாளமாக மாற்றி இப்படி ஒரு இயக்கத்தை தொடங்கியுள்ளனர்.

“வேலையில்லாத மற்றும் சோம்பேறிகளின் குரல்” என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டுள்ள இந்த இயக்கத்திற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட பலரும் ஆதரவு தந்துள்ளனர்.

அரசியல் முறைகேடுகளைச் சுட்டிக்காட்ட இக்கட்சி 5 அம்ச தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *