Gold bars seized in Ramanathapuram; CB-CID police begin investigation in Thoothukudi What is the backstory-ராமநாதபுரத்தில் சிக்கிய தங்ககட்டிகள்; தூத்துக்குடியில் விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி போலீஸார்

Spread the love

இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்ட சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி அஜய் தங்கம் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் ஆத்தூரில் கருப்பசாமி என்பவரின் வீட்டில் சோதனை நடத்தினர். இதில், மோதிரம், கை செயின், கம்மல் என 54 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.67 ஆயிரம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் நடத்திய விசாரணையில், குலசை தசாரா திருவிழாவில் முடி, கிரீடம் உள்ளிட்ட வேடப் பொருட்கள் விற்பனை செய்ததில் கிடைத்த பணத்தில் நகைகள் வாங்கியதாக கூறியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகம்

ராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகம்

தங்கக்கட்டிகள் விவகாரத்தில் சிக்கிய 5 நபர்களின் உறவினர்கள் ஆத்தூர், குரும்பூர், ஆறுமுகநேரி, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வருவதாகவும் அவர்களிடம் மேலும் சில தங்கக்கட்டிகளை கொடுத்து பாதுகாக்கப்பட்டு வருவதாக பேச்சு எழுந்தது.

இதில் சிலர் வீடு, கார், தோட்டம் போன்றவற்றை குறுகிய காலத்திலேயே வாங்கியதாகவும் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சி.பி.சி.ஐ.டி போலீஸாரின் விசாரணையால் இந்த விவகாரம் மீண்டும் சூடு பிடித்துள்ளது.   

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *