ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியான படம் “கருப்பு’. ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ் எனப் பலர் நடித்துள்ளனர்.
சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மே 15 ஆம் தேதி தான் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
இந்நிலையில் தனியார் ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கும் ஆர்.ஜே. பாலாஜி ‘கருப்பு’ படத்தை ‘Good Bad Ugly’ படத்துடன் ஒப்பிடுவது குறித்து பேசியிருக்கிறார்.

இது தொடர்பாக பேசிய அவர், ” எனக்கு முதல் பாதி எந்தவித ஆரவாரமும் இல்லாமல் நேர்த்தியாகவும், இரண்டாம் பாதி அனைத்து அம்சங்களும் நிறைந்த பக்காவான கமர்ஷியல் படமாகவும் இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன்.
மக்கள் இப்போது என் திரைப்படத்தை ‘Good Bad Ugly’ திரைப்படத்தோடு ஒப்பிடுகிறார்கள். ஆனால், நாங்கள் படப்பிடிப்பில் பாதி முடித்திருந்தபோது கூட அந்தத் திரைப்படம் வெளியாகவில்லை.