ஷோரூம் திறப்பு விழாவை முன்னிட்டு, பல்வேறு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன: தங்க நகைகளின் மீது கிராமிற்கு ரூ.250 குறைவு, பழைய தங்க நகை எக்ஸ்சேன்ஜின் மீது கிராமிற்கு ரூ.150 கூடுதல் வைரம் மற்றும் அன்கட் வைரத்தின் மதிப்பின் மீது 12.5% குறைவு (சாலிடேர்கள் தவிர) வெள்ளிப் பொருட்களின் சேதாரத்தின் (VA) மீது 25% குறைவு வெள்ளி நகைகளின் MRP- மீது 10% குறைவாக வழங்கப்படும் இந்தச் சலுகைகள் புதுக்கோட்டை ஷோரூமில் மட்டும் குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கப்படும். (நிபந்தனைகளுக்கு உட்பட்டது) ஷோரூம் திறப்புடன் ஜிஆர்டி கோல்டன் லெவேன் பிளக்ஸி ஜுவல்லரி பர்சேஸ் பிளான் எனப்படும் மாதாந்திர நகை சேமிப்புத் திட்டத்தில் இணைந்து 18% வரை சேதாரம் (VA) இல்லமால் நகையை வாங்க இயலும்.
வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப தேர்வு செய்யும் வகையில், இந்தத் திட்டத்தில் Weight-Based மற்றும் Value-Based என இரண்டு வகையான விருப்பங்கள் வழங்கப்படுகின்றன. இதில் தங்களுக்கு அதிக பயனளிக்கும் விருப்பத்தை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம்.
மேலும், இந்த நகை வாங்கும் திட்டத்தில் சேரும் வாடிக்கையாளர்கள் பரிசு + பரிசு போனான்ஸாவை பெறலாம். பதிய ஷோரூம் குறித்து ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர். ‘ஆனந்த்’ அனந்தபத்மநாபன் கூறுகையில், “எங்களின் முதல் ஷோரூமிலிருந்து 69வது ஷோரூம் வரையிலான இந்தப் பயணம், தலைமுறை தலைமுறையாக எங்கள் வாடிக்கையாளர்கள் வழங்கி வரும் நம்பிக்கையாலும் ஆதரவாலும் உருவானது. ஒவ்வொரு புதிய ஷோரூமும், அந்த உறவை மேலும் வலுப்படுத்தவும், புதிய சந்தையில் உள்ள வாடிக்கையாளர்களின் தேவைகளைப் புரிந்துகொள்ளவும் எங்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது. எங்களின் பயணத்தில் புதுக்கோட்டை ஒரு முக்கியமான புதிய அத்தியாயமாகும். இப்பகுதி மக்களின் குடும்பக் கொண்டாட்டங்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளில் ஒரு அங்கமாக இருப்பதை நாங்கள் எதிர்நோக்குகிறோம்,” என்றார்.
ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், “எங்களின் விரிவாக்கம் என்பது எப்போதும் வாடிக்கையாளர்களுக்கு மேலும் நெருக்கமாகச் செல்வதையும், எங்களின் நகைத் தொகுப்புகள் மற்றும் சேவைகளை அவர்களுக்கு எளிதாகக் கிடைக்கச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. புதுக்கோட்டையில் எங்களின் 69வது ஷோரூம் திறக்கப்படுவது அந்தப் பயணத்தின் மற்றொரு முக்கியமான படியாகும். ஜிஆர்டி ஜூவல்லர்ஸின் அனுபவத்தை புதுக்கோட்டை நகர மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இங்குள்ள வாடிக்கையாளர்களுடன் நீடித்த உறவுகளை உருவாக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்,” என்றார்.