GTA-6 மோகம்… விடுமுறை எடுக்கும் இந்தியர்கள்! உலக அளவில் முதலிடம் பிடித்த இந்தியா! – Kumudam

Spread the love

இன்றைய நவீன உலகதில் டிஜிட்டல் விளையாட்டுகளில்  குழந்தைகள் மட்டுமின்றி  இளைஞர்கள் மூழ்கி கிடக்கின்றனர். அந்த வகையில்  ‘ஜி.டி.ஏ., – 6’ என்ற புதிய வீடியோ கேம்  வெளியாவதற்கு முனபாகவே மிகப்பெரிய தாக்கத்தை  ஏற்படுத்தி உள்ளது.Grand Theft Auto VI என்பதே  GTA-6 கேமின் விரிவாக்கம்.  

ஜேசன் மற்றும் லூசியா ஆகிய முக்கியக் கதாபாத்திரங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. இது  ராக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனத்தின் பிரபலமான அதிரடி மற்றும் சாகச  திறந்தவெளி வீடியோ கேம் தொடராகும்.இதற்கு முன்னர் 
GTA-V  வெளியாகி இருந்தது. இதற்கு  இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு இருந்தது, குறிப்பாக தமிழ்நாட்டில்  இலவச  லேப்டாப்கள் வழங்கப்பட்ட போது, GTA-V கேம் சிறார்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தது.

மைக்கேல், ஃபிராங்க்ளின், ட்ரெவர் ஆகிய மூன்று முக்கியக் கதாபாத்திரங்களைக் கொண்ட இந்த விளையாட்டு, மற்றும் அதன் கதைக்களம் ஆன்லைன் தளங்களில் கிடைக்கின்றன. மொபைல் மற்றும் கன்சோல்களில் விளையாடக்கூடிய கிளாசிக் பதிப்பும் உள்ளது.

ஆண்ட்ராய்டில் இந்த  மேம்படுத்தப்பட்ட கிராஃபிக்ஸ்  கிடைக்கிறது. இந்த விளையாட்டில்  லாஸ் சாண்டோஸ், வைஸ் சிட்டிபோன்ற கற்பனை நகரங்களில் சுதந்திரமாகச் சுற்றித் திரியலாம். வாகனங்களை ஓட்டுவது, கொள்ளைத் திட்டங்கள், சாகசங்களுக்கும் பஞ்சம் இருக்காது.  

இதன் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாகவே, GTA-VI  வெளியாகிறது. கடந்த, 2013ல் வெளியான GTA-V கேமுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, 13 ஆண்டுகளுக்குப் பின், GTA-VI  வெளியாகிறது.  அமெரிக்காவைச் சேர்ந்த உலக புகழ்பெற்ற, ‘ராக்ஸ்டார் கேம்ஸ்’ நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட  மேம்படுத்தப்பட்ட, அதிநவீன வீடியோ விளையாட்டு ஆகும். 

GTA-V வெர்ஷனில் இருந்த அனைத்து அம்சங்களும் இதில்  நவீனப்படுத்தப்பட்டுள்ளன.  
வீரர்கள் இந்த கேமுக்குள் இருக்கும் பிரமாண்டமான கற்பனை நகருக்குள் சுதந்திரமாக வலம் வரலாம்.
வாகனங்களை இயக்கலாம் மற்றும் பல சாகசங்களை செய்யலாம்.

 இப்படி இருக்க தற்போது உலகம் முழுவதும் பரவி உள்ள GTA-VI  விளையட்டின் தாக்கம்தான் பேசு பொருளாகி உள்ளது. இந்த விளையாட்டை விடுமுறை எடுத்து காண்பதற்கு ஆயிரக்கணக்கானோர் ஆர்வம் கொண்டுள்ளனர்.  தொடர் விடுமுறைக்கும்  ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேமிங் ஆர்வலர்கள் பலர் வார இறுதியுடன் சேர்த்து தொடர்ந்து நான்கு நாட்கள் விடுப்பு கோரி விண்ணப்பித்துள்ளனர். 

உலகளாவிய மனிதவளத் துறை புள்ளிவிவரங்களின்படி, கேம் வெளியாகும் தேதியை ஒட்டி வருடாந்திர விடுப்பு எடுப்பது, 32 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. 
ஐரோப்பிய நாடான பிரிட்டனில் மட்டும் தேனிலவு மற்றும் பட்டமளிப்பு விழாக்களுக்கான விடுப்புகளை மிஞ்சும் வகையில், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 83,000-க்கும் அதிகமான நாட்களுக்கு விடுமுறை விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . 

சில நிறுவனங்களும் இந்த விளையாட்டை ஆதரித்து விடுமுறை அளித்திருப்பதும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. கிழக்காசிய நாடான ஜப்பானைச் சேர்ந்த ‘பாக்கெட்பேர்’ ஸ்டுடியோ, ‘வைஸ் சிட்டிக்கு வர்த்தக பயணம்’ எனக் கூறி ஊழியர்களுக்கு சிறப்பு விடுப்பு வழங்கியுள்ளது. GTA-VI  விளையாட்டை காண இந்தியர்கள் அதிக அளவு விடுமுறை கேட்டுள்ளதால், விடுமுறை எண்ணிக்கை  60 சதவீதம் வரை உயர்ந்துள்ளதை பார்த்தல், ஜிடிஏ விளையாட்டிற்கு மவுசு கூடிக்கொண்டே செல்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *