Hansika Motwani: “விவகர்த்து குறித்து எனக்கு எந்த வருத்தமும் இல்லை” – ஹன்சிகா மோத்வானி| Hansika Motwani: “I have no regrets regarding the divorce.” — Hansika Motwani

Spread the love

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா மோத்வானி. இவருக்கும் சோஹேல் கதுரியா என்பவருக்கும் 2022-ம் ஆண்டு ஜெய்பூர் அரண்மனையில் கோலாகலமாக திருமணம் நடந்தது.

ஆனால் திருமணம் ஆன சில வருடங்களிலேயே ஹன்சிகா-சோஹேல் திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து இருவரும் மும்பை பந்தாரா குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரியிருந்தனர். அதன் அடிப்படையில் கடந்த மாதம் 11-ம் தேதி இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டது.

ஹன்சிகா மோத்வானி

ஹன்சிகா மோத்வானி

அதைத் தொடர்ந்து இருவர் தரப்பிலும் எந்தத் தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலையில், சமீபத்தி ஹன்சிகா தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருந்தார்.

அதில், “மக்கள் எப்போதும் பரபரப்பான செய்திகளை எதிர்பார்ப்பார்கள். அதுபோன்றதொரு செய்தி என் மூலம் அவர்களுக்கு தலைப்புச் செய்தியளவு கிடைத்தது. அதற்கு பிறகு, அது குறித்து நான் என்ன கருத்துக் கூறுகிறேன் என எதிர்பார்ப்பார்கள்.

எனது திருமண வாழ்வில் என்ன தவறு நடந்தது என்பது குறித்து நான் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இனிமேலும் அதைப்பற்றிப் பேசப்போவதில்லை. ஏனெனில் அது எனக்கு ஒரு பொருட்டே அல்ல.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *