Harshath Khan: "என்னைப் பார்த்து யாரும் இன்ஸ்பையர் ஆகாதீங்க!" – ஹர்ஷத் கான் பேட்டி

Spread the love

2025-ம் ஆண்டுக்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் நிகழ்ச்சி கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் ஹர்ஷத் கான் ரெட் கார்பெட் வரவேற்பில் நம்மிடையே சுவாரஸ்யமான சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

ஹர்ஷத் கான், ‘ஹிப்ஹாப்’ ஆதி,
ஹர்ஷத் கான், ‘ஹிப்ஹாப்’ ஆதி,

அவர் பேசுகையில், “இந்தத் தருணம் ரொம்பவே சந்தோஷமா இருக்கு. ஏன்னா, விகடன் அவார்டுன்றது கண்டிப்பா எல்லாருக்குமே ஒரு ட்ரீமா இருக்கும். நமக்கு எங்கேயோ எட்டாத தூரத்துல இருக்குற மாதிரி தெரிஞ்ச விகடன் அவார்டை, இப்ப சில வருஷங்கள்ல நாமே வாங்குற அளவுக்கு ஒரு ஆளா வளர்ந்திருக்கோம்ங்கிறது கனவு மாதிரி இருக்கு!” என நெகிழ்ந்தவரிடம், ‘ஒருவேளை நீங்கள் இயக்குநரானால் யாரை ஹீரோவாக வைத்து இயக்குவீர்கள்?’ எனக் கேட்டோம்.

அதற்கு அவர், “சோதனை எலியா நடிக்கிறதுக்கு இப்போதைக்கு யாரும் வரமாட்டாங்க. அதனால, முதல்ல நம்மள வச்சே பரிசோதனை முயற்சிகளைச் செஞ்சு பார்ப்போம். எது எதெல்லாம் நமக்கு நல்லா வருது, எது எதெல்லாம் செட் ஆகலன்னு நம்மள வச்சே ஒரு வழியா கத்துக்கிட்டு, அதுக்கப்புறம் மத்த நல்ல நடிகர்கள்கிட்ட போய் கதை சொல்லி டைரக்ட் பண்ணலாம்.

கண்டிப்பா நம்ம ‘வி.ஜே. சித்து விலாக்ஸ்’ கேமராமேன் சூரியைத்தான் அந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவாளராகப் பயன்படுத்துவோம். அவன் நம்ம நண்பன், கண்டிப்பா பண்ணாம எப்படி?

ஆனா, அவன் இப்போ புதுசா ஆரம்பிச்சிருக்கிற டீ பிசினஸ்ல ரொம்ப பிஸியாகிட்டான். அதனால இப்போதைக்கு கேமரா பக்கம் வர்றதே இல்லை. அதுமட்டுமில்லாம, சமீபத்துலதான் அவனுக்கு மேரேஜும் ஆகியிருக்கு” என்றார் சிரித்துக்கொண்டே.

ஹர்ஷத் கான் - ஹிப்ஹாப் ஆதி
ஹர்ஷத் கான் – ஹிப்ஹாப் ஆதி

தொடர்ந்து, “சரி பாஸ், அப்படியே அடுத்த தலைமுறைக்கு உங்ககிட்ட இருந்து ஒரு அட்வைஸ்?” எனக் கேட்டதற்கு, “என்னைப் பார்த்து யாரும் இன்ஸ்பையர் ஆகாதீங்கன்னுதான் முதல்ல சொல்லுவேன்.

ஏன்னா, நான் இன்னும் பெருசா என்ன பண்ணிட்டேன்? ஒண்ணுமே பண்ணலையே! நானும் இப்பதான் இந்த ஃபீல்டுக்குள்ள வந்திருக்கேன். என்னைவிடப் பெரிய பெரிய ஆட்களைப் பார்த்து அவங்க இன்ஸ்பையர் ஆகணும்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *