Heart Beat 3.0 எப்போது? தீபா பாலு விலகலா? – Kumudam

Spread the love

இந்த அறிவிப்பை ஜியோஹாட்ஸ்டார், அனுமோல், தீபா பாலு, கார்த்திக் குமார் மற்றும் சாருகேஷ் ஆகியோர் இடம்பெற்றுள்ள புதிய போஸ்டருடன் வெளியிட்டுள்ளது. 
“ஒரு உலகம் இரண்டாகிப் போனாலும், இதயத் துடிப்பு ஒன்றுதான்” என்ற வாசகத்தையும் பகிர்ந்துள்ளது. இந்த அறிவிப்பு நடிகை தீபா பாலுவின் பிறந்தநாளான இன்று(ஜூலை 01) வெளியாகியுள்ளது.

அண்மையில் சமூக வலைதளத்தில் ரீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் ஃபேவரைட்டாக உருவெடுத்த தீபா பாலு பகிர்ந்த பதிவு ஹார்ட் பீட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதில் அவர் சிலரை மற்றும் சில இடங்களை விட்டுப் பிரிவது குறித்து குறிப்பிட்டிருந்ததால், அவர் ‘ஹார்ட் பீட்’ தொடரிலிருந்து விலகுகிறாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

ஆனால், தனது பதிவுக்குப் பின்னர் விளக்கம் அளித்த தீபா பாலு, தாம் தொடரை விட்டு விலகவில்லை என்றும், தனது கதாபாத்திரமான ரீனா, ஆர்கே மருத்துவமனையிலிருந்து ஏஎம் மருத்துவமனைக்கு மாறுகிறார் என்பதையே அந்த பதிவு குறிப்பிட்டதாக தெரிவித்தார். இதன் மூலம் மூன்றாவது சீசனிலும் தீபா பாலு இடம்பெறுவது உறுதியாகியுள்ளது.

மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்களின் தொழில்முறை சவால்கள், காதல், உறவுகள் மற்றும் தனிப்பட்ட மோதல்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ‘ஹார்ட் பீட்’ தொடரின் முதல் சீசன் 2024 மார்ச் மாதத்தில் வெளியானது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது சீசன் கடந்த ஆண்டு மே மாதத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

முதல் இரண்டு சீசன்களிலும் தலா 100 எபிசோடுகள் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது மூன்றாவது சீசனின் அறிவிப்பு வெளியாகியுள்ளதால், புதிய அத்தியாயம் எந்த திசையில் நகரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *