IPL 2027: ‘ஆஸ்தான ஆல்ரவுண்டர் டு தலைமைப் பயிற்சியாளர்’ – மும்பை இந்தியன்ஸை வழி நடத்த போகும் Pollard | IPL 2027: Pollard Named Mumbai Indians Head Coach

Spread the love

இப்போதுதான் சென்னை சூப்பர் கிங்ஸில் தலைமைப் பயிற்சியாளராக ஜாகீர் கானை நியமித்து ஆச்சரியப்படுத்தினார்கள். தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியும் தங்கள் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்புக்கு “கீரன் பொல்லார்டை” நியமித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது.

8 வருடங்களாக தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்தவர்‌ மஹேலா ஜெயவர்த்தனே. அவரது வழிகாட்டுதலில் 2017,2019 மற்றும் 2020 என மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது மும்பை இந்தியன்ஸ் அணி. அவர் விலகியதைத் தொடர்ந்து, ஏற்கனவே கடந்த 4 ஐபிஎல் தொடர்களில் பேட்டிங் பயிற்சியாளராக இருந்த கீரன் பொல்லார்டைத் தற்போது தலைமைப் பயிற்சியாளராக பதவி உயர்வு செய்துள்ளது.

பொல்லார்ட்

பொல்லார்ட்

மும்பை இந்தியன்ஸ் அணியில் நீண்டகாலத் தொடர்பில் உள்ளவர் பொல்லார்ட், ஐந்து முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றபோது, அணியில் இவரின் பங்களிப்பு மிகப் பெரியது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரான பொல்லார்ட், பல ஆண்டுகளாக வீரராகவும் பயிற்சியாளராகவும் பணியாற்றிய பிறகு, இப்போது இந்த அணியை வழிநடத்த உள்ளார்.

2027-ல் நடக்கவுள்ள ஐபிஎல் போட்டிக்கான அப்டேட்கள் நாளுக்கு நாள் ரசிகர்களை ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. தற்போது இந்தப் பதவி உயர்வு, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மேலும் வலுசேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டி20 கிரிக்கெட்டில், ஒரு வீரருக்கும் அணிக்கும் இடையிலான மிக நீண்ட பிணைப்புகளில் ஒன்றாகத் இது திகழ்கிறது.

பொல்லார்டின் 13 வருட பயணங்கள் !

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கீரன் பொல்லார்ட்

13 ஆண்டுகள் பேட்ஸ்மேனாக விளையாடிய காலத்தில், மொத்தம் 3,915 ரன்களைக் குவித்துள்ளார். மேலும் பவுலராக, சிறந்த ஃபீல்டராக… ஏன் அவ்வபோது கேப்டனாகவும் இருந்து தனது முழு மூச்சை டீமுக்காகப் பங்களித்துள்ளார்.

இப்போது அணியை மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அணியின் திறன், முக்கிய முடிவுகள் மற்றும் அணியில் உள்ள வீரர்களின் பங்களிப்பு என நன்கு அறிந்தவர் பொல்லார்ட். இந்த நியமனம் மும்பை அணியுடனான அவரது பயணத்தின் தொடர்ச்சியாகவே அமைகிறது. ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பயிற்சியாளர் பணியில் இணைந்து, பேட்டிங் பயிற்சியாளராகத் தனது அனுபவத்தை மேலும் வளர்த்துக்கொண்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *