IPL 2027: தோனி ஓய்வு; ஸ்டார்க் – போல்ட் விடுவிப்பு – வரும் ஐபிஎல் மினி ஏலம் எப்படி இருக்கும்? | IPL 2027 Mini Auction Dhoni Retirement Starc And Boult Release What To Expect This Year

Spread the love

அணிகளின் பர்ஸ் பலமும், ஏல வியூகங்களும்

ஏலத்தில் எந்த அணி ஆதிக்கம் செலுத்தப்போகிறது என்பதை அவர்களிடம் மீதமுள்ள தொகையே தீர்மானிக்கிறது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ரூ. 47.45 கோடி என்ற மிகப்பெரிய தொகையுடன் ஏலத்திற்குள் நுழைகிறது. ரிஷப் பண்ட் டெல்லி அணிக்கும், முகமது ஷமி ராஜஸ்தான் அணிக்கும் டிரேட் செய்யப்பட்டதாலும், ஆன்ரிச் நார்ட்ஜே, வனிந்து ஹசரங்கா, அவேஷ் கான் ஆகியோர் விடுவிக்கப்பட்டதாலும் லக்னோவிடம் இவ்வளவு பெரிய தொகை குவிந்துள்ளது.

இவர்களுக்கு அடுத்தபடியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ.41.65 கோடி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ரூ. 40.15 கோடி மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ரூ.39.50 கோடி ஆகிய அணிகள் வலுவான பர்ஸ் தொகையுடன் காத்திருக்கின்றன. அதே சமயம், நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ரூ.14.15 கோடி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ரூ.8.75 கோடி ஆகிய அணிகள் தங்களது முக்கிய வீரர்களைத் தக்கவைத்துக்கொண்டு, சிறிய அளவிலான மாற்றங்களுக்கு மட்டுமே ஏலத்தை நம்பியுள்ளன.

மிட்செல் ஸ்டார்க்

மிட்செல் ஸ்டார்க்

ஏலத்தில் மோதப் போகும் நட்சத்திர வீரர்கள் ஒப்பீடு

இந்த மினி ஏலத்தில் சில குறிப்பிட்ட இடங்களுக்கு அணிகளிடையே கடும் போட்டி நிலவப்போகிறது. இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களான மிட்செல் ஸ்டார்க் மற்றும் டிரெண்ட் போல்ட் ஆகியோர் ஒரே ஏலத்தில் வருவது அரிதான நிகழ்வு. பவர்பிளே ஓவர்களில் விக்கெட் வீழ்த்துவதில் போல்ட் கில்லாடி என்றால், டெத் ஓவர்களிலும் பெரிய போட்டிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதில் ஸ்டார்க் வல்லவர்.

போல்ட்டை விடுவித்துவிட்டு பஞ்சாப் அணியிடமிருந்து அர்ஷ்தீப் சிங்கை டிரேட் செய்துள்ள மும்பை இந்தியன்ஸ் பும்ரா – அர்ஷ்தீப் கூட்டணிக்குத் துணையாக மீண்டும் போல்ட்டையோ அல்லது ஸ்டார்க்கையோ வாங்க முயற்சிக்கலாம். மறுபுறம், டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் மதீஷா பதிரனாவை கேகேஆர் விடுவித்துள்ள நிலையில், பதிரனா மற்றும் மேட் ஹென்றி ஆகியோரைக் குறிவைத்து சிஎஸ்கே மற்றும் டெல்லி அணிகள் ஏலத்தில் களமிறங்கும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *