Israel Exit poll Results: ஆட்சியை இழக்கும் நெதன்யாகு? முந்தும் ஐசன்கோட்.. கடும் போட்டி! | Israel Election Exit polls suggest a rebuke of Netanyahu but no clear winner

Spread the love

International

oi-Vignesh Selvaraj

ஜெருசலேம்: இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. பிரதமர் நெதன்யாவுக்கும் முன்னாள் ராணுவ தளபதி காடி ஐசன்கோட்டுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள், ஐசன்கோட் நெதன்யாகுவை விட சற்றே முன்னிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளன.

‘நெசெட்’ என அழைக்கப்படும் இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கு நடைபெறும் தேர்தலில் 73 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மொத்தம் 120 இடங்கள் உள்ளன. இஸ்ரேல் உள்ளூர் நேரப்படி நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இரவு 10 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. பல்வேறு பகுதிகளிலும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

Israel Netanyahu Election

இணையவழி அச்சுறுத்தல்கள் மற்றும் ஹேக்கிங் காரணமாக, இஸ்ரேல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவதில்லை. இன்னும் பாரம்பரிய வாக்குச்சீட்டு முறையே நடைமுறையில் உள்ளது.

இஸ்ரேலில் எந்தொரு தனி வேட்பாளருக்கும் மக்கள் வாக்களிப்பதில்லை. மாறாக, அவர்களுக்குப் பிடித்த அரசியல் கட்சியின் ஒட்டுமொத்த வேட்பாளர்கள் அனைவருக்கும் வாக்களிப்பார்கள். இதில், ஒரு கட்சி பெறும் வாக்குச் சதவீதத்தின் அடிப்படையில் அதற்கு நாடாளுமன்ற இடங்கள் அதாவது விகிதாசாரப் பிரதிநிதித்துவ அடிப்படையில் ஒதுக்கப்படும்.

நாடாளுமன்றத்தில் ஆட்சி அமைக்க ஒரு கட்சி அல்லது கூட்டணிக்கு குறைந்தபட்சம் 61 இடங்கள் தேவை. இஸ்ரேல் வரலாற்றில் இதுவரை எந்தவொரு தனி கட்சி அல்லது கூட்டணிக்கும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைத்தது இல்லை.

பெஞ்சமின் நெதன்யாகு 19 ஆண்டுகளுக்கும் மேலாக பிரதமராக பதவி வகித்து வருகிறார். இஸ்ரேல் வரலாற்றிலேயே மிக அதிக காலம் பிரதமராக இருந்தவர் என்ற பெருமை நெதன்யாகுவுக்கு உள்ளது.

போரை கையாண்ட விதம், பணயக் கைதிகளை மீட்பதில் ஏற்பட்ட தாமதம் போன்றவற்றால் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது ஒரு தரப்பு மக்கள் அதிருப்தியில் உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

அவருக்கு போட்டியாக முன்னாள் ராணுவ தளபதி காடி ஐசன்கோட் போன்றவர்களுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அக்டோபர் 30 அன்று தபால் வாக்குகள் மற்றும் தூதரக வாக்குகளை எண்ணி முடிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். நவம்பர் 4 அன்று இஸ்ரேலின் மத்திய தேர்தல் குழு அதிகாரப்பூர்வமான இறுதி தேர்தல் முடிவுகளை வெளியிடும்.

வாக்குப்பதிவு முடிந்தவுடன் இஸ்ரேலிய ஊடகங்கள் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. இஸ்ரேலிய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள், ஐசன்கோட் அணி நெதன்யாகுவை விட சற்றே முன்னிலையில் இருப்பதாகவும், தெளிவான வெற்றியாளர் இல்லை என்றும் கூறுகின்றன.

இஸ்ரேல் தேர்தலில் காடி ஐசன்கோட் அணி அதிக எண்ணிக்கையிலான இடங்களை வென்றாலும், பெரும்பான்மையைப் பெற முடியாது என்று இஸ்ரேலிய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் நெதன்யாகுவின் லிகுட் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்க உள்ளது என்றும் இந்தக் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *