“‘ஆட்சிப்பீடம்’ என டைட்டில் வச்சு விஜய் சாருக்கு அன்பளிப்பா கொடுத்தேன்!” – டி. சிவா |”I titled it ‘Aatchipeedam’ and presented it as a gift to Vijay Sir!” – T Siva

Spread the love

தயாரிப்பாளர் டி. சிவா பேசுகையில், “நம்முடைய அன்பிற்குரிய தளபதி, மாண்புமிகு முதல்வர் விஜய் சாருக்கு என் நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். கடந்த 2017-ஆம் வருஷம் நான் அவரை நேர்ல போய் சந்திச்சேன்.

அப்போ ஒரு மக்கள் வெள்ளத்துக்கு நடுவுல அவர் மிதந்து வர்ற மாதிரி ஒரு அழகான ஹேண்ட் பெயிண்டிங் பண்ணி, அதுக்குக் கீழே ‘ஆட்சிப்பீடம்’ என டைட்டில் வச்சு அவருக்கு அன்பளிப்பா கொடுத்தேன்.

அதைப் பார்த்தவுடனே, ‘இது என்ன’னு கேட்டாரு. அதுக்கு நான், ‘நீங்க மக்கள் வெள்ளத்துல மிதந்து வந்து இந்த ஆட்சிப்பீடத்துல உட்காரணும் சார், அதான் என்னோட ஆசை’னு சொன்னேன்.

அதை கேட்டுட்டு சும்மா சிரிச்சவர், ‘நேரம் வரும்போது சொல்றேன்’னு சொன்னார். அவர் சொன்ன அந்த நேரம் வர்றதுக்குக் கரெக்ட்டா ஒரு ஆறு வருஷம் ஆகியிருக்கும்.

இப்போ அவரை ஒரு முதல்வரா நேர்ல சந்திச்சுப் பேசும்போது, இந்த பழைய சம்பவத்தை அவரே ஞாபகம் வச்சு என்கிட்ட பகிர்ந்துக்கிட்டாரு. அதைக் கேட்கும்போது மனசுக்கு அவ்வளவு பெருமையா இருந்தது.

ஏன்னா, இது தமிழக அரசியல் வரலாற்றையே புரட்டிப்போட்ட ஒரு மாபெரும் தருணம். அவருடைய இந்த பிறந்தநாளை, தமிழகத்தோட ஒரு புதிய மறுமலர்ச்சிக்கான நாளாத்தான் நான் பார்க்கிறேன்.

நான் 2017-ல இருந்தே அவர்கிட்ட ‘அரசியலுக்கு வாங்க’ன்னு தொடர்ந்து கேட்டுட்டு இருந்தேன்னா, அது எனக்கான சுயநலத்திலோ இல்ல ஏதோ ஒரு எதிர்பார்ப்புலயோ கேட்டது கிடையாது.

இந்த நாட்டுக்கு ஒரு நல்லது நடக்கணும், நல்லவர்கள் அரசியலுக்கு வரணும், எந்தவித சுயநலமும் இல்லாத ஒரு நல்லாட்சி அமையணும்ன்ற ஆசையில மட்டும்தான் கேட்டேன். அதை இன்னைக்கு நிஜமா பார்க்கும்போது பெருமிதமா இருக்கு.” எனப் பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *