AI தொழிற்நுட்பம் எந்தளவு வசதிகளைக் கொடுக்கிறதோ அதே அளவு இடைஞ்சல்களையும், மன உளைச்சலையும் கொடுக்கிறது. சமீபகாலமாக Deepfake தொழிற்நுட்பம் மூலம் நடிகளைகள் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு நடிகை ராஷ்மிகா மந்தனாவின் Deepfake வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி விவாதமானது. அதைத் தொடர்ந்து, முன்னணி திரைப் பிரபலங்களான ஆலியா பட், தீபிகா படுகோன், கத்ரீனா கைஃப், ஷாலினி பாண்டே, பாலிவுட் நடிகர்கள் ஆமிர் கான், ரன்வீர் சிங் மற்றும் கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பலர் இந்த டீப்ஃபேக் போலி வீடியோக்களால் பாதிக்கப்பட்டனர்.

அந்த வரிசையில் தற்போது நடிகை ஜான்வி கபூர் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதற்கு தெலுங்கு திரையுலகிலிருந்து கடுமையான எதிர்வினைகள் வந்துகொண்டிருக்கின்றன. நடிகர் என்.டி.ஆர், சிரஞ்சீவி உள்ளிட்டோர் கடும் கண்டனங்களையும், எச்சரிக்கையையும் பதிவு செய்திருந்தனர். அந்த வரிசையில் நடிகர் விஜய் தேவரகொண்டா தன் கண்டனங்களைப் பதிவு செய்திருக்கிறார். அவர் எக்ஸ் பக்கத்தில், “மனிதத்தன்மையின் மிக மோசமான கீழ்நிலைக்கு நாம் தள்ளப்பட்டுவிட்டோம்.
இதற்குப் பின்னால் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைச் சும்மா விடக்கூடாது.