JIO: உக்கிரமாகும் முகேஷ் அம்பானி… பங்குச் சந்தையில் முதல் நாளே ஏர்டெல்லை பின்னுக்குத் தள்ளிய ஜியோ!

Spread the love

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி இன்று அந்த இடத்தை இன்னும் வலுவாகத் தக்கவைத்துக்கொண்டுள்ளார். அவருடைய ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம் இன்று பங்குச் சந்தையில் பட்டியலாகி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.

மிகப்பெரிய ஐபிஓக்களில் ஒன்றாகப் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பிய ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் ஐபிஓ சமீபத்தில் முடிந்தது. இந்நிலையில் இன்று அதன் பங்குகள் மும்பை பங்குச்சந்தையிலும், தேசிய பங்குச்சந்தையிலும் அதிகாரப்பூர்வமாகப் பட்டியலாயின. ஜியோ பிளாட்ஃபார்ம்ஸின் ஐபிஓ விலையான ரூ.1,119 ஐ விட சுமார் 21.36 சதவிகிதம் அதிக விலையில் அதாவது ரூ.1,358-க்குப் பங்குச்சந்தையில் பட்டியலாகி உள்ளது.

இதன்மூலம், ஐபிஓவில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு பட்டியலான அடுத்த நொடியே 21% லாபம் கிடைத்துள்ளது. மேலும், இன்று சந்தை சரிவில் இருக்கும் நிலையிலும் இந்தப் பங்கு ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகிறது. இதன்மூலம் மெகா ஐபிஓக்களில் அதிக லாபம் கொடுத்த நிறுவனமாகவும் இது உள்ளது.

முகேஷ் அம்பானி குடும்பம்

முகேஷ் அம்பானி குடும்பம்

மிக முக்கியமாக, பங்குச் சந்தையில் பட்டியலான முதல் நாளே இந்தியாவிலேயே அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனங்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் ரூ.10.3 லட்சம் கோடி மதிப்பீட்டில் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிலையில் 21 சதவிகித விலை உயர்வில் பட்டியலானதால் ஜியோ நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.12.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் பட்டியாவதற்கு முன் சந்தை மதிப்பில் இரண்டாம் இடத்தில் இருந்த ஏர்டெல் நிறுவனம் தற்போது ரூ.11.8 லட்சம் கோடி மதிப்பீட்டில் உள்ளது. இதன் மூலம் ஏர்டெல் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி அதன் இடத்தை பங்குச் சந்தையில் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் பிடித்துள்ளது. மேலும், இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமாகவும் ஜியோ உயர்ந்துள்ளது.

இது, சந்தையில் பட்டியலாகும் முகேஷ் அம்பானியின் 12-வது நிறுவனமாகும். அதுமட்டுமல்லாமல் ரூ.15.8 லட்சம் கோடி என்ற மதிப்பில் பங்குச் சந்தையின் முதல் இடத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளது. இப்போது இரண்டாம் இடத்தை ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் பிடித்துள்ளது. முதல் இரண்டு இடங்களையும் தன் வசம் வைத்துள்ள முகேஷ் அம்பானியின் ஆட்டம் இனி அசுர வேகம் பிடிக்கும் என்கிறார்கள்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *