k.p.vidhyatharan 2026 குருப்பெயர்ச்சி: கன்னி ராசி அன்பர்களே… வியத்தகு முன்னேற்றம் நிச்சயம்|2026: k.p.vidhyatharan- guru peyarchi Kanni Rasipalangal

Spread the love

உங்கள் ராசிக்கு (திருக்கணிதப்படி) வரும் ஜூன் 02 முதல் 11-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப்போகிறார் குரு பகவான். லாப ஸ்தானத்தில் வந்து அமர்வதால், தொட்டது துலங்கும். எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும்.

1. அரசுக் காரியங்கள் விரைந்து முடியும். குடும்பத்தில் கூச்சல் குழப்பங்கள் நீங்கி சந்தோஷம் பெருகும். கணவன்-மனைவிக்கு இடையே அந்நியோன்யம் பிறக்கும். குழந்தை இல்லாத தம்பதியருக்குக் குழந்தைப் பாக்கியம் உண்டாகும்.

2. வெளியிடங்களில் முதல் மரியாதை கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சகோதர, சகோதரிகள் வகையில் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். கடன்கள் அடைபடும். நண்பர்கள் – உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.

3. உங்களின் சுக – சப்தமாதிபதியான குருபகவான் தனது நட்சத்திரத்தில் செல்லும் காலத்தில், இந்த ஜூன் மாதத்தில் வீடு கட்டும் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். எவரேனும் வங்கிக் கடனுக்கு விண்ணப்பித்திருந்தால், லோன் கிடைக்கும். குடும்பத்தில் சச்சரவுகள் விலகும்.

4. யோகாதிபதியான சனிபகவானின் நட்சத்திரத்தில் 18.06.26 முதல் 19.08.26 வரை குரு பகவான் பயணம் செய்வதால் தள்ளிப்போன திருமணம் கூடி வரும். குழந்தைப் பாக்கியம் உண்டாகும். பூர்விகச் சொத்துப் பிரச்னைகள் தீர்வுக்கு வரும்.

5. அடுத்த வருட ஆரம்பம் முதல் ஜூன் வரையிலும் பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். கடன் பிரச்னை தீரும். புது சொத்து வாங்குவீர்கள். நல்ல வேலை கிடைக்கும்.

கன்னி ராசி

கன்னி ராசி

6. உங்களின் 3-ம் வீட்டை குரு பார்ப்பதால், தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும். வீட்டில் சந்தோஷம் நிறைந்திருக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். உங்களின் முன்னேற்றம் பலரையும் வியக்கவைக்கும்.

7. குரு பகவான் ஐந்தாம் வீட்டைப் பார்ப்பதால், பூர்வீகச் சொத்துப் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். குழந்தைப் பாக்கியம் எதிர்பார்த்திருக்கும் தம்பதியருக்கு அந்தப் பாக்கியம் உண்டாகும். வீட்டில் பிள்ளைகளுக்குச் சுபகாரியங்கள் கூடிவரும். பூர்விகச் சொத்து ஆதாயம் உண்டாக்கும்.

8. உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டைக் குரு பார்ப்பதால், மனதில் புது தெம்பு பிறக்கும். குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். சொந்தபந்தங்களுக்கு மத்தியில் பெருமை அடைவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். சோர்வு, விரக்தி விலகும்.

9. வியாபாரத்தில், சந்தை நிலவரம் அறிந்து புதிய முதலீடுகள் செய்வீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உணவு, இரும்பு, புரோக்கரேஜ் வகைகளால் ஆதாயம் உண்டு. கூட்டுத்தொழிலில் பங்குதாரர் களுடனான மனத்தாங்கல் விலகும். வேலையாட்களின் ஆதரவு உண்டு.

10. உத்தியோகத்தில் பதவியுயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். தலைமைப் பொறுப்பு தேடி வரும். வேலைகள் அதிகரித்தாலும் திறம்பட சமாளித்து மீள்வீர்கள்.

11. கணினித் துறையினருக்குப் பார்வை பிரச்னைகள் ஏற்படலாம். வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து அதிக சம்பளத்துடன் கூடிய அழைப்பு வரும். கலைத்துறையினருக்குப் பரிசு, பாராட்டு கிடைக்கும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *