குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான சரண்யா, 2004-ம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான “காதல்’ படத்தில் ஹீரோயின் சந்தியாவுக்கு தோழியாக நடித்து ரசிகர்களிடத்தில் பிரபலமானார்.
தொடர்ந்து எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய பேராண்மை படத்தில் 5 ஹீரோயின்களில் ஒருவராக நடித்தார். இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார்.
இதற்கிடையில் நிறுவனம் ஒன்றைத் தொடங்கி நடத்திவந்தார். இந்த நிலையில் சமீபத்தில் ‘Sawswag’ யூடியூப் சேனலுக்குப் பேட்டியளித்திருந்தார். அதில் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை அனுபவத்தைப் பகிர்ந்திருக்கிறார்.

அவரின் பேட்டியின் ஒருபகுதியில், “எனக்கு 19 வயது இருக்கும்போது, நான் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டேன். என் அம்மா வேறொரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துச் சென்றுவிட்டதால், நான் தனியாக வர வேண்டியதாயிற்று.
வெளியே வந்த புதிதில் உணவிற்கே மிகவும் கஷ்டப்பட்டேன். அந்தச் சமயத்தில்தான் நான் நடித்த ‘பேராண்மை’ திரைப்படம் வெளியாகி இருந்தது. ஆனால், அதன்பிறகு எனக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை.