Kadhal Guru: LOVE-ல அடிக்கடி சண்டை வருதா? Healthy Relationship-கான 4 Rules..! – Kumudam

Spread the love

“நீ முதல்ல பேசு…”

“இல்ல, நீதான் பேசணும்…”

இப்படித்தான் பல காதல் சண்டைகள் ஆரம்பிக்கும். சில நிமிடங்களில் ஆரம்பித்த சின்ன argument, இரவு முழுவதும் பேசாமல் இருக்கும் அளவுக்கு பெரிதாகிவிடும். அதிலும் இப்போதெல்லாம் ஒரு seen, ஒரு reply இல்லாத message, ஒரு story view கூட relationship-ல் பெரிய பிரச்சனையை உருவாக்கிவிடுகிறது. 

ஆனால், காதல் என்றால் சண்டையே வரக்கூடாது என்பதல்ல. சண்டை வந்த பிறகும் “நாம் இருவரும் ஒரே பக்கம்” என்பதை மறக்காமல் இருப்பதுதான் முக்கியம்.

ஒரு healthy relationship-ஐ காப்பாற்ற பெரிய பெரிய rules தேவையில்லை. இந்த 4 விஷயங்களை மட்டும் மனதில் வைத்துக்கொண்டாலே போதும்.

1. எல்லார் முன்னாடியும் சண்டை போடாதீங்க!

கோபம் வந்தால் வார்த்தைகள் நம்மை அறியாமலேயே வெளியே வந்துவிடும். ஆனால், அந்த கோபத்தை மற்றவர்கள் முன்னால் காட்டுவது, பின்னாளில் வருத்தத்தை தரலாம். Friends முன்னாடி, family முன்னாடி, public-ல் என எங்காக இருந்தாலும், ஒருவரை ஒருவர் அவமானப்படுத்துவதை தவிர்க்கலாம். உங்கள் ego-வை prove பண்ணுவதைவிட, உங்கள் காதலை protect பண்ணுவது முக்கியம். பிரச்சனை இருந்தால் தனியாக பேசுங்கள். கோபம் அதிகமாக இருந்தால் கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால், மற்றவர்கள் முன்னால் உங்கள் துணையை காயப்படுத்தாதீர்கள்.

2. “பேசாதே… தூங்கலாம்!” என்ற முடிவு வேண்டாம்

சண்டை முடிந்ததும் எல்லாம் உடனே சரியாகிவிடாது. சில நேரம் இருவருக்குமே கோபம் இருக்கும். சில வார்த்தைகள் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். அப்படியிருக்கும்போது உடனே solution கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. “இப்போ நம்ம ரெண்டு பேருக்கும் கோபம் இருக்கு. கொஞ்சம் calm ஆனதும் பேசலாம்” என்று சொல்லிவிடுங்கள். ஒரு சின்ன hug கூட, அந்த நேரத்தில் “நான் உன்னை விட்டுப் போகல” என்று சொல்லாமல் சொல்லிவிடும். பிரச்சனையை மறைப்பது வேறு, அதை சரி செய்ய நேரம் எடுத்துக்கொள்வது வேறு.

3. கஷ்டமாக இருந்தாலும் பேசுங்க!

Relationship-ல் அதிகமாக பிரச்சனையை உருவாக்குவது சண்டை இல்லை. பேசாமல் இருப்பதுதான்.

“அவருக்கே புரியும்…”

“அவளுக்கு தெரியும்…”

என்று நினைத்துக்கொண்டு மனதில் இருப்பதை சொல்லாமல் விட்டால், ஒரே விஷயம் ஆயிரம் விதமாக புரிந்துகொள்ளப்படும். உங்களுக்கு hurt ஆகியிருந்தால் சொல்லுங்கள். பிடிக்கவில்லை என்றால் சொல்லுங்கள். பயம் இருந்தாலும் சொல்லுங்கள். ஆனால், பேசாமல் தண்டிக்காதீர்கள்.

“நீ எப்போதுமே இப்படித்தான்” என்று குற்றம் சாட்டுவதற்குப் பதிலாக, “இது எனக்கு கஷ்டமாக இருந்தது” என்று உங்கள் உணர்வை சொல்லிப் பாருங்கள். ஒரு honest conversation, பல unnecessary fights-க்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

4. ஒரு மோசமான நாளுக்காக… நல்ல நாட்களை மறந்துடாதீங்க!

இது தான் ரொம்ப முக்கியம். ஒரு நாள் அவர்கள் உங்களை hurt செய்திருக்கலாம். ஒரு நாள் பெரிய சண்டை நடந்திருக்கலாம். ஒரு நாள் இருவருமே ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளாமல் இருந்திருக்கலாம். ஆனால், அந்த ஒரு நாளை வைத்து ஒட்டுமொத்த relationship-ஐயும் தீர்மானித்துவிடாதீர்கள்.

உங்களுக்காக அவர்கள் இருந்த நாட்களை நினைத்துப் பாருங்கள். நீங்கள் அழுதபோது ஆறுதல் சொன்ன தருணம். நீங்கள் தோல்வியடைந்தபோது “நான் இருக்கேன்” என்று சொன்ன நேரம். காரணமே இல்லாமல் இருவரும் சிரித்துக் கொண்டிருந்த அந்த இரவு. அந்த ஒரு bad day-வால் அந்த எல்லா beautiful memories-யும் disappear ஆகிவிடாது.

ஆதலால், “சண்டையே இல்லாத relationship” கிடையாது. சண்டைக்குப் பிறகும் பேசத் தெரிந்த relationship. கோபத்திலும் ஒருவரை ஒருவர் மதிக்கத் தெரிந்த relationship. “நான் ஜெயிக்கணும்” என்பதைவிட, “நம்ம காதல் ஜெயிக்கணும்” என்று நினைக்கும் relationship. அதுதான் நீண்ட நாட்களுக்கு அழகாக இருக்கும்.

ஒரு சண்டை உங்கள் காதலை தீர்மானிக்க வேண்டாம். அந்த சண்டைக்குப் பிறகு நீங்கள் ஒருவரை ஒருவர் எப்படி அணைத்துக்கொள்கிறீர்கள் என்பதுதான் உங்கள் காதலை சொல்லும்.

Kadhal POV — காதலை கொஞ்சம் வேற கோணத்தில் பார்ப்போம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *