பெங்களூரு:
இளம்பெண்ணை கொன்று 30 துண்டுகளா வெட்டி பிரிட்ஜில் வைத்த கொடூரம் பெங்களூரில் நடைந்து உள்ளது.
இளம்பெண் கொலை
பெங்களூர் நகரின் வயாலிகாவல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பைப்லைன் சாலை அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தவர் மகாலட்சுமி(வயது26). இவர் பிரபல வணிகவளாகத்தில் பணியாற்றி வந்து உள்ளார்.
காலை 9.30 மணிக்கு வெளியே சென்றால் இரவு 10:30 மணிக்கு வீடு திரும்பி வருவதை வழக்கமாக கொண்டு இருந்தார். சுமார் 6 மாதமாக மகாலட்சுமி இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்து உள்ளார். மேலும் அவர் அக்கம்பக்கத்தினருடன் அதிகம் பழகாமல் தனியாக இருந்து வந்ததாக தெரிகிறது.
கடந்த சில நாட்களாக தங்கிஇருந்த வீட்டில் இருந்து மாகலட்சுமி வெளியே சென்று வரவில்லை. இதனால் அவர் வெளியூர் சென்று இருக்கலாம் என்று அக்கம்பக்கத்தினர் நினைத்து இருந்தனர்.
இந்த நிலையில் இன்று(21-ந்தேதி) காலை மாகலட்சுமி தங்கி இருந்த வீட்டில் இருந்து பயங்கர துர்நாற்றம் வீசியது.
30 துண்டுகளாக
இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து வீட்டுக்குள் சென்று பார்த்த போது பயங்கர துர்நாற்றம் வீசியது. மேலும் அங்குள்ள பிரிட்ஜை திறந்து பார்த்தபோது அதில் துண்டு, துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல் இருந்தது. கொலையுண்டது மாகலட்சுமி என்பதை போலீசார் உறுதி படுத்தி உள்ளனர்.
வெட்டப்பட்டு பிரிஜில் வைக்கப்பட்டு இருந்த உடல் பாகங்களில் இருந்து புழுக்கள் வெளியே வந்தன. உடல் அழுகி துர்நாற்றம் வீசிய பின்னரே மகாலட்சுமி கொலையுண்டது தெரியவந்து உள்ளது.
இந்த கொலை சம்பவம் 10-15 நாட்களுக்கு முன்பு நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பிரிட்ஜில் பெண்ணின் பெரும்பாலான உடல்பாகங்கள் இருந்தன. கொலையாளி மகலாட்மியை தீர்த்து கட்டிவிட்டு உடலை கொடூரமான முறையில் அரிவாள் அல்லது வாளால் துண்டு, துண்டாக கூறுபோட்டு பிரிட்ஜில் அடைத்து வைத்த தப்பி சென்று உள்ளார்.
விசாரணை
இதையடுத்து குடியிருப்பு மாகலட்சுமியை அடிக்கடி சந்திக்க வரும் நபர்கள் யார்?யார்?, அவருடன் நெருங்கி பழகியவர்கள் யார்? வேலைபார்த்த இடத்தில் யாருடனும் தகராறு உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொலையுண்ட மகாலட்சுமிக்கு சொந்த மாநிலம் மேற்கு வங்கம் அல்லது சத்தீஸ்கராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அந்த பெண் குறித்த எந்த தகவலும் தெரியவில்லை.
அவளது சகோதரன் அவளுடன் சில நாட்கள் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.மேலும் மகாலட்சுமிக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளதாகவும், ஆனால் தனியாக வசித்து வந்ததாகவும் தெரிகிறது. இதையடுத்து குடும்ப தகராறில் இந்த கொலை நடந்ததா? என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதுதொடர்பாக மகாலட்சுமியின் கணவரிடமும் விசாரிக்க முடிவு செய்து உள்ளனர்.
குளிர்சாத பெட்டியில்
கொலை தொடர்பாக கூடுதல் போலீஸ் கமிஷனர் என். சதீஷ் குமார் கூறுபோது, இளம்பெண்ணை கொலை செய்து உடலை 30க்கும் மேற்பட்ட துண்டுகளாக நறுக்கி வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியில் அடைத்து வைத்துள்ளனர். கொ¬யுண்ட பெண்ணின் பெரும்பாலான உடல் பாகங்ள் மீட்கப்பட்டு உள்ளது. கொலையாளி உடல்பாகங்களை அகற்றுவதற்காக எடுத்துச் சென்றதற்கான வாய்ப்புகள் குறைவு. கொலையாளி குறித்து இது குறித்து வயலக்காவல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் கொடூர கொலை கடந்த 2022 -ம் ஆண்டு புதுதில்லியில் உள்ள சத்தர்பூரில் நடந்தது.27 வயதான ஷ்ரத்தா வாக்கர் என்பவர் அவரது காதலரும், 29 வயதான அப்தாப் அமின் பூனாவாலா என்பவரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். பின்னர் உடலை 35 துண்டுகளாக வெட்டி அவற்றை அருகில் உள்ள வனப்பகுதியில் வீசி இருந்தார். இதேபோல் தற்போது பெங்களூரில் இளம்பெண் கொலை செய்யப்பட்டு உள்ளதார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.