இந்திய இளைஞர்களின் கனவு பைக்காக இருக்கும் KTM, இப்போது ஓர் அதிரடி மாற்றத்தைச் செய்துள்ளது. அதிக வேகம், அதிக விலை என்று இருந்த பிம்பத்தை மாற்றி, அதே வேகத்தைச் சற்றே குறைவான விலையில் கொடுக்க முன்வந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் இன்ஜின் மாற்றமோ அல்லது டிசைன் மாற்றமோ அல்ல; அது நம் நாட்டு வரி விதிப்பு (GST).
ஏன் இந்த 350cc மாற்றம்?
இந்தியாவில் பைக்குகளுக்கான GST வரி விதிப்பில் ஒரு முக்கியமான விதி உள்ளது. 350cc-க்கு மேல் இன்ஜின் திறன் கொண்ட பைக்குகளுக்கு வரி மிக அதிகம் (சுமார் 40% வரை). ஆனால், 350cc-க்கு கீழே இருக்கும் பைக்குகளுக்கு வரி குறைவு (சுமார் 18% GST).
இதுவரை KTM 390 சீரிஸ் பைக்குகள் 399cc அல்லது 373cc இன்ஜின் கொண்டிருந்ததால், அவை `சொகுசு” அல்லது ‘ப்ரீமியம்’ பிரிவில் வகைப்படுத்தப்பட்டு அதிக வரி வசூலிக்கப்பட்டது. இப்போது KTM புத்திசாலித்தனமாக அந்த இன்ஜினை 349.32cc ஆகக் குறைத்துள்ளது. இதன் மூலம் பைக் வாங்குபவர்களுக்கு நேரடியாக வரி லாபம் கிடைக்கிறது.