இது குறித்து கே டி ராஜேந்திர பாலாஜியின் நெருங்கியவர்கள் சிலரிடம் பேசினோம். “ராஜேந்திர பாலாஜி 2016 சட்டமன்றத் தேர்தலில் விருதுநகர் மாவட்ட அதிமுகவில் ஏழுக்கு ஏழு தொகுதியை கைப்பற்றி கொடுத்தவர். ஆனால் தற்போது அதிமுகவில் பல அணிகளாக பிரிந்து கிடப்பதால் அவரது எதிர்காலத்தை பற்றி யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்.
குறிப்பாக இப்படியே அதிமுகவில் இருந்தால் ராஜேந்திர பாலாஜிக்கும், ஆதரவாளர்களான எங்களுக்கும் அடுத்து அரசியலில் என்ன செய்வது என்ற மனநிலையில் இருக்கிறார்கள். அதிமுக-வில் ராஜேந்திர பாலாஜி கடுமையாக உழைத்தாலும் அவருக்கு சில வழக்குகளில் கட்சியின் தலைமையானது துணை நிற்கவில்லை. இந்த வருத்தம் அவருக்கு கடந்த சட்டமன்றத் தேர்தலில் இருந்து வருகிறது. அதனால் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ராஜேந்திர பாலாஜி விரைவில் திமுகவிற்கு போகலாம். காரணம் திமுக முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மிக மிக சீனியர், அவருக்கு அடுத்த சட்டமன்றத் தேர்தலில் சீட்டு கிடைப்பதை கடினம்.

அவரது மகன்களும் அரசியலில் இருந்து தள்ளியே இருக்கிறார்கள். அதனால் திமுகவில் செல்வாக்கான ஒரு நபரை விருதுநகரில் களம் இறக்கி விருதுநகர் மாவட்ட திமுகவை பலப்படுத்த நினைக்கிறது கட்சியின் தலைமை. அதற்கு முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி நல்ல சாய்ஸாக இருப்பார்” என ஒரே மூச்சாக சொல்லி முடித்தார்கள்.
இது குறித்து கே.டி.ஆர் ஆதரவாளர்கள் சிலரிடம் பேசினோம். “தேர்தல் முடிந்த பிறகு கட்சியில் நடக்கும் பிரச்னைகளில் அண்ணன் ராஜேந்திர பாலாஜி பெரிதாக தலையிடுவதில்லை. பல நாட்கள் வெளியூரில் தான் இருக்கிறார் கட்சி வேலைகளில் முழுமையாக இருந்த அவருக்கு அதிமுக தலைமை உரிய மரியாதை கொடுக்கவில்லை. அதனால் விரைவில் நல்ல முடிவை எடுக்கலாம்” என சொல்லி முடித்தார்கள்.
இது குறித்து கே டி ராஜேந்திர பாலாஜியிடம் கருத்து கேட்க அழைத்தோம். “நான் வெளியூரில் இருக்கிறேன், பிறகு பேசுகிறேன்“ என சொல்லி போனை கட் செய்தார்.!