Labham – 3: EMI + SIP… வீட்டுக் கடனை எளிதாகக் கட்டி முடிக்கும் சூப்பர் ஃபார்முலா

Spread the love

ஆனால், விக்னேஷ் மாதந்தோறும் ரூ.40,000 இ.எம்.ஐ கட்டுவதற்குப் பதிலாக, ரூ.50,000 கட்டுகிறார். இதனால் 25 ஆண்டுகளுக்கு பதிலாக சில ஆண்டுகள் முன்பே கட்டி முடித்துவிடலாம் என்பதே அவர் எண்ணம்.

ஆனால், அவர் நண்பர் கணேஷ் தந்த ஐடியா விக்னேஷுக்கு புதிய தெளிவைத் தந்தது. ”இ.எம்.ஐ-ஆக ரூ.50,000 மட்டும் கட்டுவதற்கு பதிலாக ரூ.40,000-த்தை மட்டும் கட்டிவிட்டு, 10,000 ரூபாயை பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வந்தால், நிறைய லாபம் கிடைக்கும்” என்று சொல்ல, அதன்படியே செய்ய ஆரம்பித்தார் விக்னேஷ்.

முதல் இரண்டு வருடங்கள் மட்டும் ரூ.50,000 கட்டியவர்கள், மூன்றாம் ஆண்டு தொடங்கி, வீட்டுக்கடனுக்கு ரூ.40,000, எஸ்.ஐ.பி முதலீடு ரூ.10,000 என்று அடுத்த 13 வருடங்களுக்குக் கட்டினார். அப்படி கட்டியதால், அவரால் எவ்வளவு பணம் சேர்க்க முடிந்தது?

ரூ.10,000 என 13 ஆண்டுகளுக்குக் கட்டிய தொகை ரூ.15,60,000.

12% கூட்டு வட்டி வளர்ச்சியில் கிடைத்த லாபம் – ரூ.20,18,336.

ஆக மொத்தமாகத் திரும்பக் கிடைத்த பணம் – ரூ.35,78,336.

இதில் லாப வரியாக ரூ.4,47,292 போக ரூ.31,31,044 உங்களுக்குக் கிடைக்கும் இந்தப் பணத்தை அப்படியே வீட்டுக்கடனில் கட்டினால் நீங்கள் திரும்பக் கட்ட வேண்டிய வீட்டுக்கடன் பணம் மிகப் பெரிய அளவில் குறைந்துவிடும். அப்படி குறைந்த அளவில் இருக்கும் பணத்தை அடுத்த சில ஆண்டுகளிலேயே நீங்கள் எளிதாகக் கட்டிமுடித்துவிடலாம்!

ஆக, EMI + மியூச்சுவல் ஃபண்ட் SIP என்கிற சூப்பர் ஃபார்முலாவை ஃபாலோ செய்வதால், எவ்வளவு நன்மை கிடைக்கிறது என்பது உங்களுக்குத் தெளிவாகத் தெரிகிறதில்லையா?

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *