LIC: 376 வீரர்கள் பங்கேற்பு; பெங்களுருவில் தொடங்கிய அகில இந்திய எல்.ஐ.சி விளையாட்டுப் போட்டிகள்!

Spread the love

அகில இந்திய எல்.ஐ.சி. விளையாட்டு போட்டிகள் 2026-27-ஐ எல்.ஐ.சி.யின் முதன்மைச் செயல் அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு ஆர்.துரைசுவாமி அவர்கள், பெங்களூருவிலுள்ள ஸ்ரீகாண்டீரவா ஸ்டேடியத்தில் இன்று தொடங்கி வைத்தார். ஆண்டுதோறும் எல்.ஐ.சி.யால் நடத்தப்படும் இப்போட்டிகள் நான்கு நாள்கள் நடைபெறும். கேரம், செஸ், டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன், வாலிபால் மற்றும் தடகளம் போன்ற ஆறு விதமான போட்டிகள் நடைபெறவுள்ளன.

துவக்க விழாவில் திருமதி. எல்.கிரிஜா, செயல் இயக்குநர் (மனிதவள மேம்பாடு & பயிற்சி), திரு. பிரதீப் பி.ஷெனாய், செயல் இயக்குநர் (நிறுவன தொடர்பு), திருமதி. லதா மாடம்பத், செயல் இயக்குநர் (பணியாளர் உறவு), திரு. சரவண ரமேஷ் எஸ்., மண்டல மேலாளர், தென் மத்திய மண்டலம் மற்றும் திரு. ஆர்.கே.யாதவ், முது நிலை கோட்ட மேலாளர், பெங்களூரு கோட்டம்-1 ஆகியோர் கலந்து கொண்டனர்.

எல்.ஐ.சி. விளையாட்டு போட்டிகள்

எல்.ஐ.சி. விளையாட்டு போட்டிகள்
g.srividya

எல்.ஐ.சி.யின் முதன்மைச் செயல் அதிகாரி மட்டும் மேலாண்மை இயக்குநர் திரு ஆர்.துரைசுவாமி அவர்கள் விளையாட்டில் பங்குபெறும் வீரர்களிடையே உரையாடும்போது, போட்டி மனப்பான்மையை விட நம்முடைய பண்புகளை வளர்க்க விளையாட்டுகள் உதவுவதாகத் தெரிவித்தார். ஆர்வத்தோடு போட்டிகளில் பங்குபெற்று தங்களுடைய சிறந்த திறனை வெளிப்படுத்தவும் அறிவுறுத்தினார்.

விளையாட்டு வீரர்களின் அணிவகுப்புடன் இது தொடங்கப்பட்டது. அதன் பிறகு எல்.ஐ.சி.யின் முதன்மைச் செயல் அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு ஆர்.துரைசுவாமி அவர்கள், எல்.ஐ.சி. நிறுவன கொடியேற்றினார்.

எட்டு மண்டலங்களிலிருந்து 376 விளையாட்டு வீரர்கள் இந்தப் போட்டிகளில் பங்கேற்பார்கள்.

அக்டோபர் 8, 2026 அன்று அகில இந்திய எல்.ஐ.சி. விளையாட்டு போட்டிகள் 2026-27 முடிவடைகின்றன. அதில் திரு ஆர்.சந்தர், மேலாண்மை இயக்குநர், எல்.ஐ.சி ஆஃப் இந்தியா அவர்கள் முதன்மை விருந்தினராக பங்கு கொள்வார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *