License of 108-year-old Olympia Coffee House suspended due to cockroach infestation and unhygienic conditions.-கரப்பான்பூச்சி நடமாட்டம், சுகாதாரமின்மையால் 108 ஆண்டு பழமையான ஒலிம்பியாகாபி ஹவுஸ்லைசென்ஸ் சஸ்பெண்ட்

Spread the love

மகாராஷ்டிராவில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை கமிஷனராக ஐ.ஏ.எஸ். அதிகாரி துகாராம் முண்டே பதவியேற்ற பிறகு சுகாதாரமற்ற முறையில் இயங்கும் உணவகங்களுக்கு எதிராக தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருகிறார். சுகாதாரம் இல்லாமல் இயங்கிய உணவகங்களில் ரெய்டு நடத்தி அவற்றின் லைசென்ஸை தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்து வருகிறார். மும்பையில் மாநகராட்சி நிர்வாகத்தால் நடத்தப்படும் நாயர் மருத்துவ்மனையில் செயல்பட்டு வந்த கேண்டீன் சுகாதாரம் இல்லாமல் இருந்ததால் அதன் லைசென்ஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா முழுவதும் 14 ரெஸ்டாரண்ட்கள், உணவகங்களின் உரிமங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.

தற்போது பண்டிகைக் காலம் என்பதால் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட ரெய்டில் ரூ.7,38,230 மதிப்புள்ள 2,813 கிலோ கலப்பட பால் மற்றும் பால் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டள்ளது. இவை மும்பை, கொங்கன், புனே, சத்ரபதி சம்பாஜிநகர் மற்றும் நாசிக் ஆகிய இடங்களில் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ரூ.4.66 லட்சம் மதிப்பிலான கலப்படம் மற்றும் தரமற்ற நமக்கீன், வெல்லம், பாக்கு, கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

கரப்பான் பூச்சி

கரப்பான் பூச்சி

108 ஆண்டு காபிஷாப் லைசென்ஸ் சஸ்பெண்ட்

வாடிக்கையாளர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் மும்பை கொலாபாவில் உள்ள 108 ஆண்டுகள் பழமையான ஒலிம்பியா காபி ஹவுஸில் அதிரடி சோதனை நடத்தப்பட்டதை தொடர்ந்து அதன் உரிமத்தை மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. உணவு சேமிப்பு பகுதிக்குள் சிறுநீர் கழிக்கும் இடம், கரப்பான் பூச்சிகள் மற்றும் ஈக்களின் தொற்று மற்றும் குளிர்சாதன பெட்டியில் இறைச்சி மற்றும் இரத்த எச்சங்கள் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்ததை அடுத்து, அதிகாரிகள் இந்நடவடிக்கையை எடுத்தனர்.

ரெய்டு குறித்து துகாராம் முண்டே கூறுகையில்,”‘ஒலிம்பியா காபி ஹவுஸ் ஆய்வில் பல தீவிர உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதார மீறல்கள் காணப்பட்டது . உணவு சேமிப்பு பகுதியில் உள்ள சிறுநீர் கழிப்பிடத்தை தவிர, சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்தல் மற்றும் பாத்திரம் கழுவும் வசதிகள், உணவு நேரடியாக தரையில் கையாளப்படுவது, அசுத்தமான நீரை பயன்படுத்துதல் ஆகியவற்றை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். சைவம் மற்றும் அசைவ உணவு பொருட்கள் சரியாகப் பிரிக்கப்படவில்லை.

இந்த ஆண்டு ஜூலை மாதம், ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் கிறிஸ்டோபர் நோலன் மற்றும் நடிகர்கள் டாம் ஹாலண்ட் மற்றும் மாட் டாமன் ஆகியோர் மும்பையில் தங்களின் ‘ஒடிஸி’ திரைப்படத்தின் பிரீமியர் காட்சிக்கு முன்னதாக ஒலிம்பியா காபி ஹவுஸுக்கு சென்று மூவரும் பன் மாஸ்கா மற்றும் சில இனிப்புகளுடன் தேநீர் அருந்தினர் என்பது குறிப்பிடத்தாக்கது .

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *