llegal firecracker manufacturing in a tin shed in Sivakasi; tragedy claims four lives-சிவகாசியில் தகர செட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பு; 4 பேர் உயிரிழந்த சோகம்

Spread the love

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியைச் சேர்ந்த ராம்பிரசாத் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றிலிருந்து, சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு லாரிகள் மூலம் தண்ணீர் வியாபாரம் செய்யப்பட்டு வந்துள்ளது. மேல் பார்வைக்குத் தண்ணீர் வியாபாரம் நடப்பது போலக் காட்டிவிட்டு, தோட்டத்திற்குள் சட்டவிரோதமாக தகர செட் அமைத்து பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

 வெடி விபத்து

வெடி விபத்து

இங்கு ரகசியமாகப் பட்டாசு தயாரிக்கப்படுவதை அறிந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் பொதுமக்கள், ராம்பிரகாஷைக் கண்டித்ததுடன் இதுகுறித்து காவல் நிலையத்திலும் புகார் அளித்தும் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.  இருப்பினும், புகாரைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக உராய்வு ஏற்பட்டுப் பட்டாசுகள் வெடித்துச் சிதறின.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *